புதுக்கோட்டை: தைலமரக்காட்டுக்குள் கிடந்த இளம்பெண் சடலம்... பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா?

0

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பழனியம்மாள் (35). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல் கறம்பக்குடி போலீஸில் புகார் அளித்தார். கறம்பக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பழனியம்மாளை தேடி வந்தனர். 

 இந்த நிலையில் தான், பல்லவராயன்பத்தை ஊராட்சி தொம்பரான்பட்டி கிராமத்தில் உள்ள தைலமரக்காட்டில் உடைகள் அலங்கோலமாக அழுகிய நிலையில் ஒரு பெண் சடலமாகக் கிடப்பதாக கறம்பக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், காணாமல் போன பழனியம்மாள் தான் என்பது தெரியவந்தது.

பழனியம்மாள்

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பழனியம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருடைய உடலைப் பார்த்து உறுதி செய்தனர். பழனியம்மாளின் உடலைப் பார்த்து மகள்கள் 4 பேரும் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பழனியம்மாளின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம், குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள புதுப்பட்டியில் அவருடைய  உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி டி.எஸ்.பி தீபக் ரஜினி,  உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழனியம்மாள் இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியதையடுத்து, மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.

காவல்துறை

இதையடுத்து, பழனியம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலேசியாவிலிருந்த வந்த திருச்செல்வம், மனைவியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்வதோடு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இதற்கிடையே, பழனியம்மாள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலிஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் ஆத்தங்கரைவிடுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இவரின் வீட்டிற்கு வந்ததாகவும், அடிக்கடி தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அவரைப் பிடித்து போலீஸ் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதோடு, சந்தேகத்தின் பேரில் வெண்ணவால்குடியைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/BfxOuoH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*