பட்டப்பகலில் பார்வையற்ற மூதாட்டியிடம் அத்துமீறிய இளைஞன் - ராணிப்பேட்டை அதிர்ச்சி!

0

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரப் பகுதியில் பார்வையற்ற மூதாட்டி ஒருவர், ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டிருக்கிறார். அவர் பொதுமக்களிடம் உதவிக்கேட்டு, ஓர் ஓரமாக அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒருநாள் அந்த மூதாட்டி சாலையோரம் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த இளைஞன் ஒருவன், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான். அதுவும் பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டமிருந்தும் பயமின்றி, மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறான்.

பாலியல் சீண்டல் - அதிர்ச்சி காட்சி

இதையெல்லாம் பார்த்தும், பார்க்காததைப்போல பொதுமக்கள் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். ஒரு மூதாட்டிக்கு ஏற்பட்டிருக்கும் அருவருக்கத்தக்க இந்தக் கொடுமையை தடுக்கவோ கண்டிக்கவோ முன்வராமல், சிலர் செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார்கள். தற்போது அந்த காணொளி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்தக் காட்சியில், பார்வையற்ற அந்த மூதாட்டியின் அருகில் வந்து அமரும் அந்த கொடூர இளைஞன், கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறான். பின்னர், பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு ஏதோவொரு பொட்டலத்தை எடுத்து, அதிலிருந்த பவுடர் போன்ற போதைப்பொருளை மூக்கில் வைத்து நுகர்கிறான். பின்னர், அந்த மூதாட்டியின் மடியில் ஏறி அமர்ந்து, அவரை பாலியல் வன்கொடுமைசெய்ய முயல்கிறான்.

ராணிப்பேட்டை

இளைஞரிடம் சிக்கிய அந்த மூதாட்டி ‘விடு.. விடு’ என்று கதறுகிறார். இதையெல்லாம் வீடியோ பதிவுசெய்த நபர்களும் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை! இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து, வாலாஜாபேட்டை போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘அந்த பையன்தான் அந்தப் பாட்டிக்கு சாப்பாடு வாங்கித்தருபவன். எப்போதுமே போதையில் இருக்கக்கூடியவன். ஆனாலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தவறு என்பதால், அவனைக் கைதசெய்திருக்கிறோம். அவன் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவன்’’ என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/t3hfvP1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*