கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆழ்வார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன்(33). கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியர் திருமணத்திற்கு பின்பு இரண்டு மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் ஒருநாள் இரவில் திடீரென வீட்டில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். அதன் பின்னர் மருத்துவமனைக்குச் சென்று முழு உடல் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவரது வயிற்றுப்பகுதியில் ஏதோ பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே ஒருநாள் தனது மனைவியின் செல்போனை எடுத்து வடிவேல் முருகன் பார்த்தபோது வாட்ஸ் அப்பில் அவரின் முன்னாள் காதலன் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், வடிவேல் முருகனுக்கு நெஞ்செரிச்சலுக்கான மருந்தில் ஏதோ விஷம் கலந்து கொடுப்பதாகவும் வாட்ஸ்அப் சாட் மூலம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார் வடிவேல் முருகன். அப்போது தனது முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருப்பதாகவும், கணவனை பிடிக்கவில்லை எனவும் சுஜா கூறியிருக்கிறார். அப்போது வடிவேல் முருகன் மயங்கி விழுந்ததாகவும், அதில் அவரின் கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இப்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த வடிவேல் முருகன் தனது மனைவி மருந்தில் ஸ்லோ பாய்சன் கலந்து மனைவி கொலை செய்ய முயன்றதாக வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் வடிவேல் முருகனிடம் மாஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து வடிவேல் முருகன் கூறுகையில், "எனது மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததார், அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதால் என்னை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், இப்போது காதலனுடன் தொடர்பில் இருந்துகொண்டு என்னை கொலைச் செய்ய மருந்தில் ஸ்லோ பாய்சன் கலந்து தந்திருக்கிறார். மனைவியின் வாட்ஸ்அப் சாட்டை பார்த்ததால் நான் தப்பித்துக்கொண்டேன். இல்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/KpWPbnz
via
