`பொன்னியின் செல்வன்' சக்சஸ் மீட்டில் குந்தவை ஆப்சென்ட், காலில் கட்டு; த்ரிஷாவுக்கு என்னாச்சு?

0

'பொன்னியின் செல்வன்' சக்சஸ் மீட்டில் பங்கேற்ற பலரும் குந்தவையான த்ரிஷாவைத் தேடினார்கள். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் அவர் விடுமுறைக்காக வெளிநாட்டில் சுற்றுலா சென்றதற்கான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஆகையால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் நிகழ்வில் பங்கேற்கவில்லை என நினைத்திருந்தார்கள். இந்நிலையில்தான் அவர் இன்ஸ்டாவில் காலில் கட்டுடன் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

'பொன்னியின் செல்வன்' சக்சஸ் மீட்

த்ரிஷா, இப்போது 'தி ரோடு', 'ராம்', 'பொன்னியின் செல்வன் 2', 'சதுரங்கவேட்டை 2', லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் எனப் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தொடர்ந்து இடைவிடாமல் நடித்து வந்தவருக்குச் சில நாள்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது. அந்த நாள்களில்தான் அவர் வெளிநாடு பறந்தார். இந்நிலையில் திடீரென அவரது காலில் கட்டுப் போட்டிருப்பது ஏன், அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனிடம் பேசினேன்.

"வெளிநாட்டு விடுமுறையைக் கொண்டாடிட்டு த்ரிஷா சென்னை திரும்பிட்டாங்க. அவங்க வீட்டுல இருக்கும் போது மாடிப்படி ஏறும்போதுதான் கால் லேசா இடருச்சு. அதுவும் முதல் படியேறும் போது இப்படி ஆனதால, காயம் சின்னதாச்சு. கீழே விழுந்த உடனேயே அவங்க கால்ல வீக்கம் வந்திருச்சு.

த்ரிஷா

வீங்கின இடத்துல கறுப்பும் நீலமுமா கலரும் மாறினதால உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தோம். நல்ல காலம். பெரிய பாதிப்பு எதுவும் இல்ல. லேசா தசைபிடிப்பு இருக்கறதால மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்திருக்காங்க. வீக்கத்தைக் குறைக்க கால்ல ஐஸ்கட்டி வைக்கறாங்க. டாக்டர்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்காங்க. மத்தபடி அவங்க ரொம்ப நல்லாயிருக்காங்க! ஓய்விற்குப் பிறகு 'ராம்' படப்பிடிப்பில் பங்கேற்பாங்க..." என்கிறார் உமா கிருஷ்ணன்.

சோழ இளவரசி விரைவில் நலம் பெறட்டும்!



from தமிழ் சினிமா https://ift.tt/fVNEnzU
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*