``நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன்!” - நயினார் நாகேந்திரன் பேட்டி

0

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரின் உருவச் சிலைக்கு தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்டத் தலைவர் தயா சங்கர் ஆகியோர் தலைமையில் கட்சியினர், வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வ.உ.சி மணிமண்டபத்தில் பா.ஜ.க-வினர்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதற்காக கட்சியின் அடிப்படை அமைப்புகளைப் பலப்படுத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-பா.ஜ.க இடையே கூட்டணி என்பதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும் எங்களுக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். அதனால், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வருகிறார்கள். இனியும் வருவார்கள்.

பொருளாதாரத்தின் பின்தங்கிப சமூகத்தினருக்கன பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் இதன் மூலம் பலனடையவிருக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை தி.மு.க எதிர்ப்பதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

வ.உ.சி சிலைக்கு மரியாதை

அ.தி.மு.க-வில் பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் சேர்ந்தால் அ.தி.மு.க-வின் பலம் அதிகரிக்கும். அதனால் நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்பம் இருக்கிறது. கட்சித் தலைமை வாய்ப்புக் கொடுத்தால் நான் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/1fw68bE
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*