தன் மகள் திருமணத்துடன் 51 ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர்.பி.உதயகுமார், அதற்கான அழைப்பிதழை கட்சியினருக்கு கொடுத்து வருகிறார்.
இன்று சோழவந்தான், குருவித்துறையிலுள்ள கோயிலில் பூஜை செய்துவிட்டு, அந்தப் பகுதி கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆர்.பி.உதயகுமார் அழைப்பிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், கழகத்தின் 51-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டும் அம்மா பேரவை சார்பில் என் மகள் திருமணமும், 51 ஜோடிகளுக்கு இலவசத் திருமணமும் டி.குன்னத்தூரிலுள்ள அம்மா கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் நடைபெறுகிறது.
தேர்தலை மையமாக வைத்து பெரும்பாலான கட்சிகள் செய்லபடுகின்றன. ஆனால், அ.தி.மு.க-வோ மக்கள் நலனை மையமாகக் கொண்டு உழைத்து வருகிறது. தமிழகத்திலுள்ள கோயில்களில், ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது ஆகம விதிகள் மீறுப்படுகின்றன.
ஆகம விதிமுறைமீறலால் மக்கள் மனமும் தெய்வங்கள் மனமும் வருத்தப்படும். நம்முடைய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஆகம விதிகளை மீறினால், அரசுக்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எம்.ஜி.ஆர் அதிக நாள்கள் தி.மு.க-வில் இருந்தார் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். திராவிட கொள்கைகளை மறந்து, ஜனநாயக கொள்களை மறந்து, குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்துகிறது.
ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவர் பெயரில் அ.தி.மு.க-வை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் இருக்கும்போது கருணாநிதியை கோட்டை பக்கம் வரவிடாமல் மக்கள் தடுத்தனர். அதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சர், தனக்குள்ள அதிகாரத்தை வைத்துப் பேசியிருக்கிறார். தி.மு.க-வை எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கினார் என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.
நாணயத்தின் இரு பக்கங்களாக எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும். தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க, எதிர்க்கட்சியை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசின் மீது பழி போடுவதிலும், அவதூறு பரப்புவதிலும் வல்லவர்களாக இருந்தார்கள்.
ஜல்லிக்கட்டு சம்பந்தமாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஜல்லிக்கட்டை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/v7a8hgL
via
