கேரளா: அதிகரிக்கும் வெளிநாட்டு பெண்கள் பாலியல் வழக்குகள்; கொரிய பெண் வழக்கில் திணறும் போலீஸ்!

0

உலக சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது கேரளம். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் கேரளாவில் படகு சவாரி, ஆயுர்வேத சிகிச்சை என வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதே சமயம் வெளிநாட்டுப் பெண்களுக்கு பாலியல் ரீதியான கொடுமைகளும் அங்கு அடிக்கடி நடந்து வருகின்றன.

பாலியல் பலாத்காரம்

லாட்வியா நாட்டைச் சேர்ந்த 40 வயதான பெண் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோட்டில் மன அழுத்தத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி கோவளத்தில் நடைப்பயிற்சிக்காக சென்ற அவரை சுற்றுலா வழிகாட்டிகளாக போலியாக வலம் வந்த உமேஷ், உதயகுமார் ஆகியோர் ஆட்டோவில் புதர் காட்டுக்குள் கடத்திச் சென்று மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

அதன் பின்பு கழுத்தை நெரித்துக் கொலை செய்து, காட்டுக்கொடியில் கட்டி தூக்கினர். இந்த மாதம் தொடக்கத்தில் உமேஷ், உதயகுமார் ஆகியோருக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டணை மற்றும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது கோர்ட்.

இந்த நிலையில் கொரியாவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கொரியாவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், ஊருக்குச் செல்வதற்காக சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சென்றார். அவரிடம் விமானத்தில் கொரியா செல்ல தேவையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கொரியமொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாத அந்த பெண், மனநலம் பாதிக்கபட்டவர் போன்று நடந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து அதிகாரிகள் அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம், தன்னை சிலர் பாலியல் கொடுமை செய்ததாகத் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம்

மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து பரிசோதனை மேற்கொண்டபோது, கொரியா பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண், கோழிக்கோடு சிட்டியில் தங்கியிருந்ததால் இதுகுறித்து கோழிக்கோடு டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த பெண் தன்னை பாலியல் கொடுமை செய்தது யார் என சொல்லத்தெரியாத நிலையில் உள்ளார். அவரது செயல்பாடுகள் மனநலம் பாதித்தது போன்று உள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்ல முடியாத நிலையில் போலீஸார் உள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/GvmVeka
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*