நெல்லை: முதல்வர் திறந்துவைத்த உழவர் சந்தை... இருமுறை நடந்த விற்பனை தொடக்கம்! - திமுக கோஷ்டிப்பூசலா?

0

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனி பகுதியில் ரூ.45.30 லட்சம் மதிப்பீட்டில் நெல்லையின் ஐந்தாவது உழவர் சந்தை கட்டப்பட்டது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கட்டப்பட்ட இந்த உழவர் சந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாகத் திறந்துவைத்தார். தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், மேயர் சரவணன் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

முதல் விறபனையைத் தொடங்கி வைத்த அப்துல் வஹாப்

விழாவில் பேசிய அப்துல் வஹாப், “விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைந்த காய்கனிகளை, இடைத்தரகர்கள் இல்லாமல் தாங்களே நேரடியாக விற்பனை செய்வதற்கு இந்த உழவர் சந்தை உதவியாக அமையும். அருகிலுள்ள கிராமங்களின் விவசாயிகள் இந்த சந்தையின் மூலம் சுமார் 50 டன் காய்கனிகளை விற்பனை செய்து பயனடையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று பேசினார். அவருடன் தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் வந்தனர்.

அப்துல் வஹாப் அணியினர் உழவர் சந்தையில் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றதும், முன்னாள் எம்.எல்.ஏ-வும் தி.மு.க-வின் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளருமான மாலைராஜா தலைமையில் தி.மு.க-வின் மற்றொரு கோஷ்டியினர் அந்த உழவர் சந்தைக்கு வந்தனர். உழவர் சந்தை வளாகத்தில் மாலைராஜா மரக்கன்று நடவு செய்தார்.

மரக்கன்று நடவு செய்யும் மாலைராஜா அணியினர்

உழவர் சந்தை அமைந்திருக்கும் பகுதியின் வார்டு கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், நெல்லை மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், உள்ளிடோர் மீண்டும் உழவர் சந்தை விற்பனையைத் தொடங்கி வைத்தனர். தனித்தனியாக நடந்த இந்த விழாக்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் உழவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் குழப்பமடைந்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/eO4ldcT
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*