நாமக்கல்: திருமண ஆசை... சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

0

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (38). இவர், நாமக்கலில் கண் கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் பல இடங்களில் இவருக்கு பெண் தேடியும், பெண் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதன் கடத்தி சென்றதாகச் சொல்லப்படுகிறது.

நாமக்கல்

பின்னர், அந்த சிறுமியை, அந்த பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து, விஸ்வநாதன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு, விஸ்வநாதனை நாமக்கல் சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/yKnE9h5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*