கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில், கண்ணன் என்பவர் சார்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அலுவலக வேலை நேரத்தில் உள்ளே நுழைந்த கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த சங்குகுமார் (வயது 41) என்ற நபர், தன்னை விஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்துகொண்டார். மேலும், 'உங்க அலுவலகத்தைப் பற்றி நெகட்டிவாக புகார் வந்திருக்கிறது. அதனால், அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறிய அந்த நபர், சார்பதிவாளரிடம் ஒரு கட்டத்தில் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த சார்பதிவாளர் கண்ணன், அவரது அடையாள அட்டையை கேட்டு வாங்கி பார்த்தபோது, அது போலியானது எனத் தெரியவந்திருக்கிறது. இதனால், சார்பதிவாளர் கண்ணன், அந்த போலி அதிகாரி பற்றி கரூர் நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, கரூர் நகர காவல் நிலைய போலீஸார் அந்த நபடை கைதுசெய்து விசாரணை செய்ததில், அந்த நபர் போலியான வருமானவரித்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சார்பதிவாளர் கொடுத்த புகாரினை பெற்றுக்கொண்ட கரூர் போலீஸார், அந்த நபர் மீது வழக்கு பதிந்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் ஏற்கெனவே கடந்த மாதம் தனியார் பள்ளி ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி பணம் பறிக்க முயன்ற 73 வயது முதியவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போத அரசு அலுவலகத்தில் விஜிலென்ஸ் அதிகாரி என்ற போர்வையில் சோதனை எனக் கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/W3av2jA
via
