கரூர்: ``கடத்தி காட்டுக்குள் வைத்து சித்ரவதை செய்தனர்!" - அதிமுக ஊராட்சிக்குழு உறுப்பினர் புகார்

0

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் இருக்கின்றன. இதில், அ.தி.மு.க 9, தி.மு.க 3 இடங்களை கைப்பற்றின. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கண்ணதாசன் ஊராட்சிக்குழு தலைவராகவும், துணைத் தலைவராக தானேஷ் என்கிற முத்துக்குமாரும் பதவி வகித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சட்டமன்ற பொது தேர்தலின்போது துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். இதனால், தான் வகித்து வந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பின், நடைபெற்ற அந்த வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதால், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 3-லிருந்து 4-ஆக உயர்ந்தது. மேலும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் இருவர், தி.மு.க-வில் இணைந்ததால், தி.மு.க-வின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. இதனால், தி.மு.க 6, அ.தி.மு.க 6 என உறுப்பினர்களின் எண்ணிக்கை சமநிலை அடைந்ததது. இதனால், துணைத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க சார்பில், உயர் நீதிமன்றத்தில் துணைத் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

தள்ளுமுள்ளு

போதிய உறுப்பினர்கள் இல்லாததால் ஏற்கெனவே ஐந்து முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன் கஸ்டடியில் வைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ``தேர்தலை வீடியோ பதிவுடன் நடத்த வேண்டும். கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை மதியம் 2:30 மணி அளவில் நடத்தி தேர்தல் முடிவுகளை உறையிட்ட சீலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவை பிறப்பித்தனர். அதனால், நேற்று ஆறாவது முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேடசந்தூர் அருகே உள்ள தாடிகொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வை கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இன்னொருபக்கம், தேர்தல் முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "தேர்தல் வீடியோ பதிவுடன் நடைபெற்றது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு, நீதிமன்றம் தேர்தல் முடிவை அறிவிக்கும்" என்றார்.

நேற்று இரவு கரூர் கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருவிக, "என்னை கடத்தி, ஐந்து மணிநேரம் காட்டுக்குள் வைத்து சித்ரவதை செய்தனர். கையில் எல்லாம் ரத்தம் வடிந்தது. என்னை ஏன் கடத்தி மிரட்டி, அடிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, 'நாங்க என்ன பண்றது? இது, மேலிடத்து உத்தரவு'னு தி.மு.க பேரைச் சொன்னாங்க. யாருக்கு வீடியோ அனுப்புறீங்கன்னு கேட்டதுக்கு, அசோக், அசோக்னு ஒரு பெயரை சொன்னாங்க. அசோக்னா அமைச்சரின் தம்பியான்னு கேட்டேன். அதுக்கு, ஆமாங்கன்னு சொன்னாங்க. என்னோட போட்டோவை அவருக்கு அனுப்புனாங்க.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதுக்கு பிறகு அவர், இனிமே திருவிகவை அடிக்க கூடாதுன்னு சொன்னதாக, என்னைக் கடத்தியவர்கள் என்கிட்ட சொன்னாங்க. எல்லோரும் மதுரைக்காரங்க மாதிரி தெரியுது. அவங்க முகம் தெரியும். ஆனா, அவங்க யார்னு எனக்கு தெரியாது. எட்டு பேர் சேர்ந்து என்னைக் கடத்தினாங்க. அதுல, இரண்டு பேர் பைகளில் ஸ்டாலின் படம் வைத்திருந்தாங்க. அதன்பிறகு, யாரிடமோ இருந்து போன் வர, என்னை விட்டுட்டாங்க" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/vuJnU3F
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*