தஞ்சாவூர்: குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை... தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மகன்

0

தஞ்சாவூர், சூரக்கோட்டை அருகே உள்ள அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (55) கூலி தொழிலாளி. இவரின் மனைவி அமுதா. இவர்களின் மகன் சின்னத்துரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கொலை செய்யபட்ட தந்தை

சின்னதம்பி கூலிவேலை செய்வதன் மூலம் கிடைக்கும் சம்பள பணத்தை தன் மனைவியிடம் கொடுப்பதில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அந்த பணத்தில் தினமும் மது குடித்துவிட்டு போதையில் மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக இது போல் சின்னதம்பி செய்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூரிலில் வேலை பார்த்து வந்த சின்னத்துரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போதும் சின்னத்தம்பி தன் மனைவியிடம் போதையில் தகராறு செய்துள்ளார். `எப்ப பார்த்தாலும் இது மாதிரி செய்யுறீயேப்பானு?’ கேட்டு மகன் சின்னத்துரை தன் அப்பாவை கண்டித்துள்ளார்.

கொலை

இந்நிலையில் மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறு செய்ததால் சின்னத்துரை ஆத்திரமடைந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவருக்குமான சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

தந்தை, இப்படி தொடர்ந்து குடிப்பதும், தகராறு செய்வதுமாக இருக்கிறார் இதனால் எல்லோருடைய நிம்மதியும் கெட்டு போகிறது என சின்னதுரை எல்லோரிடத்திலும் புலம்பியிருக்கிறார். இந்நிலையில் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை சின்னதம்பி மீது அம்மி குழவிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு கொலை செய்து விட்டார் மகன் சின்னதுரை என அப்பகுதியினர் அதிர்ச்சி விலகாமல் பேசி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீஸார் சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை சின்னத்துரையை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/iItY6fE
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*