ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் ஆக்டிவா 7ஜி? அசத்தும் ஹோண்டா நிறுவனம்

0

 

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் ஆக்டிவா 7ஜி? அசத்தும் ஹோண்டா நிறுவனம்



Honda Activa 7g

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் கைனடிக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. பிறகு ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இரு சக்கர வாகன விற்பனையில் சக்கை போடு போட்டது. இப்போது ஹீரோ நிறுவனம் தனியாக பிரிந்து சென்றுவிட்டது. அதன் பிறகும் ஹோண்டா நிறுவனம் சளைக்கவில்லை. தனியாக பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. புதிய நவீன நான்கியர் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ததே ஹோண்டா நிறுவனம் தான் எனலாம். அந்த வகையில் முதல் ஸ்கூட்டராக அறிமுகமான ஆக்டிவா இப்போதும் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறது. பல ஆண்டுகளாக டாப் சேல் ஸ்கூட்டராகவும் வலம் வருகிறது ஆக்டிவா ஸ்கூட்டர்கள்.

நான் கியர் ஸ்கூட்டர்களை கைனடிக் நிறுவனத்தோடு இணைந்து 1984 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்திருந்தது ஹோண்டா நிறுவனம். அந்த அனுபவத்தோடு தான் புதிய நவீன நான்கியர் ஸ்கூட்டரான ஆக்டிவாவை தயாரித்துள்ளது ஹோண்டா நிறுவனம். 2000ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை இந்தியாவின் வெற்றிகரமான நான்கியர் ஸ்கூட்டராக இருக்கிறது ஆக்டிவா. அதோடு தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் என அடுத்தடுத்து அப்டேட்களுடன் ஆக்டிவாவை மெருகேற்றிக் கொண்டிருக்கிறது ஹோண்டா நிறுவனம். அதன் தொடர்ச்சியாக வெளிவர இருப்பது தான் ஆக்டிவா 7ஜி.

புதிய ஆக்டிவா 7ஜி 100 கிலோமீட்டர் மைலேஜ் தரும்  என்கிற ஆச்சரிய செய்தி அதன் வரவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்துள்ளது. சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆக்டிவா 7ஜி-யின் அறிமுகம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம். ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டர் செயல்படும் விதம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கவைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிலோமீட்டர் மைலேஜ் என்பது சாத்தியமா எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.


மாருதி சுசுகி

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாள் அன்று மாருதி சுசுகிகார் நிறுவனம் தனது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவை ஜிம்னி மற்றும் பலேனோ கிராஸ் மாடல்கள் ஆகும். Baleno Cross மாடலுக்கு Fronx எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை செய்துவரும் டீலர்களின் கீழ் விற்பனைக்கு வருவதாக மாருதி தெரிவித்துள்ளது.

Baleno cross Fronx வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:

நெக்சா பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் காம்பேக்ட் SUV கூப் மாடலாக Fronx அமைந்துள்ளது. பலேனோ கிராஸ் - ஃபிராங்க்ஸ் பிராண்டின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது ஸ்போர்ட்டியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற பம்பர்கள் சற்று திடமாக அமைக்கப்பட்டுள்ளது.

இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக் மாடலில் உள்ளதைப் போலவே வழங்கப்பட்டுள்ளது. அளவீடுகளை பொருத்தவரை, 4 மீட்டருக்கும் குறைவாக அதாவது 3995mm நீளமும், 1550mm உயரமும் மற்றும் 1765mm அகலமுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இரு மாடல்களிலும் வெவ்வேறு டெக்ஸ்ச்சர் மற்றும் சில வேறுபாடுகள் இருக்கும் என தெரிகிறது. மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், HUD, 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பல அம்சங்களுடன் இது வழங்கப்பட்டுள்ளது. பாடி பேனல்கள் தவிர இந்த காரில் அப்ரைட் நோஸ் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளிட்டவை கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. LED பிளாக் டெயில் விளக்குகளுடன் பூட் மூடியின் நீளம் முழுவதும் இயங்கும் LED ஸ்டிரிப்பைப் கொண்டுள்ளதாக இந்த மாடல் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Fronx மாடலில் இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.


BYD Seal Electric Car

சீனாவின் BYD நிறுவனம், தனது 3வது மாடலாக ‘Seal’ என்ற புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆல் வீல் டிரைவ் வசதி உள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று BYD நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவு திறன்கொண்டதாகும். இந்த கார் வரும் 2023 தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

BYD seal எலக்ட்ரிக் கார் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:

BYD Seal எலக்ட்ரிக் கார் உலகளவில் ‘டெஸ்லா மாடல் 3’ காருடன் போட்டிபோடும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கிரிஸ்டல் LED ஹெட் லேம்ப், LED DRLS, இன்பினிட்டி LED டெயில் லைட் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த காரில் CTB (Cell to Body) என்ற புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

e Platform 3.0 கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் Drag Coefficient அளவு மிகவும் குறைவானதாகும். அதாவது வெறும் 0.219Cd மட்டுமே உள்ளது. இதில் மேலும் 50 : 50 என்ற விகிதத்தில் Axle Load டிஸ்ட்ரிபியூஷன் அளவு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரியின் சிறப்பம்சங்கள்:

வெளிநாடுகளில் இந்த e-Platform 3.0 பேட்டரி இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்று 61.4KWH - லும் மற்றொன்று 82.5KWH . இதன் முதல் பேட்டரி ஆப்ஷன் (61.4KWH) 550 கிலோமீட்டர் ரேஞ்ச் மற்றும் பெரிய பேட்டரி (82.5KWH) ஆப்ஷன் 700 கிலோமீட்டர் ரேஞ்ச் அம்சங்களை கொண்டுள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் செடான் கார் என்பதால் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 65 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

377

இந்த கார் Kia EV6 மற்றும் BMW i4 ஆகிய எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விளங்கும். சமீபத்தில் BYD நிறுவனம் வெளியிட்ட பிரீமியம் எலக்ட்ரிக் SUV காரான BYD ATTO 3 காரில் இப்போது ‘Forest Green’ என்று புதிய கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் வெறும் 1,200 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் கூடுதலாக தெரிவித்துள்ளது.


மாருதி கார்

மாருதி நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலை உயர்த்தப்படும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கார் தயாரிப்பிற்காகச் செலவுகள் அதிகரித்துள்ளதால் விலையை அதிகரிக்க முடிவு செய்ததாக மாருதி நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதன்படி திங்கள் கிழமை முதல் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை 1.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாடல் என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

தற்போதைய நிலவரப்படி, மாருதி சுஸுகியின் அரீனா போர்ட்ஃபோலியோ ஆல்டோ, ஆல்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ, டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா மற்றும் ஈகோ போன்ற கார்களைக் கொண்டுள்ளது. Nexa வரிசையில் Baleno, Ignis, XL6, Ciaz மற்றும் Grand Vitara ஆகிய மாடல்கள் உள்ளன.

மாருதி சுஸுகி தனது நெக்ஸா வரிசையில் இரண்டு புதிய கார்களைச் சேர்க்க உள்ளது, அவை ஜிம்னி 5-டோர் மற்றும் ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகும். இந்த இரண்டு புதிய வகைகளும் ஆட்டோ எக்ஸ்போ 2023 அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கார்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றன.


மஹிந்திரா ஸ்கார்பியோ

நாட்டின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, நமது நாட்டின் ராணுவத்திடம் இருந்து அதிகளவிலான ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட் வாகனங்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ள தகவலில் இந்திய ராணுவத்திடம் இருந்து 1,470 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களுக்கான ஆர்டரை சமீபத்தில் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. டெலிவரி செய்யப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்கள் நாடு முழுதும் உள்ள இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

நமது இந்திய ராணுவம் பலவித பணிகளை செய்ய ஏராளமான பேஸஞ்சர் வெஹிகிள் மாடல்களை பயன்படுத்துகிறது. இதில் டாடா சஃபாரி, மாருதி சுசுகி ஜிப்சி, ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் டாடா செனான் போன்ற வாகனங்கள் அடங்கும். தற்போது இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் சேர உள்ளது பல பணிகளை மேற்கொள்வதில் ராணுவத்தின் திறன்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பான தகவலை வெளிப்படுத்திய ட்விட்டில் "நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவத்தின் 12 பிரிவுகளுக்கு அனுப்பும் வகையில் 1,470 ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட் வாகனங்ளுக்கான ஆர்டரை பெற்றுள்ளோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த இந்திய ராணுவத்திற்கு நன்றி" என கூறி இருக்கிறது. Scorpio Classic வாகனமானது அதன் ஸ்டைலிங் எலமென்ட்ஸ்களின் அடிப்படையில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது மற்றும் புதிய தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட Scorpio-N மாடலில் இருந்து வேறுபட்டது.

ஆர்டரின் பேரில் இந்திய ராணுவத்திற்காக எதிர்காலத்தில் டெலிவரி செய்யப்பட ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களில் ஏதேனும் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படுமா என்பதை பற்றி மஹிந்திரா நிறுவனம் எதையும் குறிப்பிடவில்லை. எனினும் வழக்கமான ஸ்கார்பியோ கிளாசிக் யூனிட்களில் ராணுவத்திற்காக ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட, பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக இந்த விவரங்கள் வெளியிடப்படாமல் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். வழக்கமான ஸ்கார்பியோ கிளாசிக் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன், 130bhp ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் 300Nm பீக் டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இல்லை.

6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த குறிப்பிட்ட மாடலில் 4x4 ஆப்ஷன் இல்லை. எனினும் இப்போது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் வாகனம் புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஃப்ரன்ட் பம்பர், ரிவைஸ்ட்டுட LED புரொஜெக்டர் ஹெட் லைட்ஸ், ரீடிசைன் செய்யப்பட்ட அலாய்ஸ் மற்றும் அப்டேட்டட் டெயில் லைட் லேஅவுட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இந்த வாகனத்தின் கேபினில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது.


பாதுகாப்பான கார்

அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகின்றன. பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் கார்கள் விபத்து நேரங்களில் வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சில நேரங்களில் விபத்தின் போது சாலையில் செல்லும் பிறருக்கும் கூட ஆபத்தை குறைக்கும் வகையிலும் செயல்படுகிறது.

பாதுகாப்பை பொறுத்தவரை இந்திய கார் தொழில்துறை கடந்த சில ஆண்டுகளில் பல அம்சங்களை செயல்படுத்தி உள்ளது. அரசு கார் நிறுவனங்கள் சில நிலையான பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கார் வாங்குவோர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அந்த வகையில் நாட்டில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

டாடா பஞ்ச்:

2021-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகம் விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மைக்ரோ எஸ்யூவி-யான டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த காரானது அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ், சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் பெற்றுள்ளது. அடல்ட் ப்ரொட்டக்ஷன் பிரிவில் இந்த கார் 17 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 16.45 புள்ளிகளை பெற்றது.

சைல்ட் ப்ரொட்டக்ஷன் பிரிவில் 49 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 40.89 புள்ளிகளை பெற்றுள்ளது. டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஈபிடி, பிரேக் ஸ்வே கன்ட்ரோல், லோ-ட்ராக்ஷன் மோட், சீட்பெல்ட் ரிமைன்டர், ஹை-ஸ்பீட் அலெர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ISOFIX சைல்ட் சீட் மவுன்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. டாடா பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சம் - ரூ.9.54 லட்சம் வரை இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300:

GNCAP-யிலிருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் முதல் சப்-4-மீட்டர் SUV இதுவாகும். அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.42 / 17) , சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 37.44 / 49) பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை 6 ஏர்பேக்ஸ், 4 டிஸ்க் பிரேக்ஸ், ஃப்ரன்ட் & ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் , ABS மற்றும் EBD கொண்ட கார்னரிங் ஃப்ங்ஷன், ஃப்ரன்ட் & ரியர் ஃபாக் லேம்ப்ஸ், ISOFIX ஆங்கரேஜ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து பேஸஞ்சர்களுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்ஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது. XUV 300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 8.41 லட்சம் - ரூ.14.07 லட்சம் வரை இருக்கின்றன.

377

டாடா அல்ட்ரோஸ்:

குளோபல் NCAP-யிலிருந்து 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக் இதுவாகும். இந்த கார் அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.13 / 17) , சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 3 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 29 / 49) பெற்றுள்ளது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் இந்த கார் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2 ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமரா, முன் இருக்கைகளுக்கான சீட்-பெல்ட் ரிமைன்டர்ஸ் மற்றும் Isofix சைல்ட்-சீட் மவுன்ட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. Tata Altroz காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 6.34 லட்சம் - ரூ.10.25 லட்சம் வரை இருக்கின்றன.

டாடா நெக்ஸான்:

இது டாடாவின் குளோபல் NCAPயிலிருந்து 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இந்த இந்தியா காராகும். இந்த கார் துவக்கத்தில் 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இதனையடுத்து நிறுவனம் அம்சங்களை மேம்படுத்தி இரண்டாவது சுற்று சோதனைக்கு அனுப்பியது. அப்போது இது அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 5 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 16.06 / 17) பெற்றது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 3 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 25 / 49) பெற்றுள்ளது. அல்ட்ரோஸை போல இதுவும் சைல்ட் ப்ரொட்டக்ஷனில் சிறப்பாக இல்லை. 2 ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமரா, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், பிரேக் டிஸ்க் வைப்பிங் மற்றும் Isofix சைல்ட்-சீட் மவுண்ட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. Tata Nexon காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.70 லட்சம் - ரூ.14.18 லட்சம் வரை இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ்:

இந்த ஹேட்ச்பேக் அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் (ஸ்கோர் - 13.89 / 17) பெற்றது. சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 4 ஸ்டார்ஸ் ரேட்டிங் (ஸ்கோர் - 31.84 / 49) பெற்றுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 90bhp பவர் மற்றும் 110Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் அடங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.11 லட்சம் - ரூ.10.41 லட்சம் வரை இருக்கின்றன.


இயற்கை எரிவாயுவால் இயங்கும் காரை அறிமுகப்படுத்திய மாருதி

டெல்லியில் ஜனவரி 18 வரை நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சியில், மாருதி நிறுவனம் தான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய காரை காட்சிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

டெல்லி அருகே கிரேடர் நொய்டாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச "ஆட்டோ எக்ஸ்போ" நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளையும், எதிர்கால திட்டமிடல்களையும் காட்சிப்படுத்தியுள்ளன. இதில் எஸ்யுவி வகை கார்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ஜப்பானை சேர்ந்த லெக்ஸஸ் (Lexus ) நிறுவனம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான எல்.எக்ஸ் 500 டி மற்றும் ஆர்.எக்ஸ் (RX) எஸ்யுவி-களை காட்சிப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் டர்போ பெட்ரோல் இன்ஜின் வகையை சேர்ந்தவை. மாருதி நிறுவனம் காட்சிப்படுத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய விதாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி, எஸ்யுவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாதிரிப்படம்

எலெக்ட்ரானிக் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகளை இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்துள்ள நிலையை, குறிப்பாக சீனாவை சார்ந்துள்ள நிலையை குறைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ACMA) தலைவர் சஞ்சய் கபூர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ACMA), இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சொஸைட்டி (SIAM) மற்றும் இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் ஆகியோர் கூட்டாக இணைந்து எலெக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான இலக்கை அடைய பணியாற்றி வருகிறோம். எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான உற்பத்திக்கு மாபெரும் தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஆகவே, உள்நாட்டு உற்பத்தியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

ஒரு தொழில்துறை என்ற வகையில், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்துறையுடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஒருங்கிணைந்த சக்திகளின் முயற்சிகளோடு, உள்நாட்டு உற்பத்தி முயற்சியை நாம் ஊக்குவிக்க முடியும் மற்றும் நாம் செய்ய வேண்டியதும் இதுதான்’’ என்று தெரிவித்தார்.

இந்தியாவின் இறக்குமதி எவ்வளவு

தற்போதைய நிதியாண்டின் முதல் அரை இறுதியில் எலெக்ட்ரானிக் உதிரி பாகங்களின் இறக்குமதியானது ரூ.79,815 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரை இறுதியில் ரூ.64,310 கோடி அளவுக்கு இருந்த இறக்குமதி மதிப்பை ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதம் அதிகமாகும்.

எலெக்ட்ரானிக் பாக இறக்குமதியை பொருத்தவரையில் ஐரோப்பியா 26 சதவீதமும், வட அமெரிக்கா 8 சதவீதமும் கொண்டுள்ள நிலையில், ஆசியா பிராந்தியம் 65 சதவீதத்தை கொண்டுள்ளது.

குளிர்காலத்தில் அதிகமாக டீ, காஃபி குடிப்பதால் ஏற்படும் குறைபாடுகள்.!

இந்த நிலையில் எலெக்ட்ரானிக் பாகங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது குறித்து சஞ்சய் கபூர் கூறுகையில், “அரசும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரானிக் பாகங்களின் இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில், நாம் உற்பத்தியை நோக்கி நம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் 40 சதவீத வாகனங்களில் சாஃப்ட்வேர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற நிலை கிடையாது. அதை மனதில் வைத்து ஆட்டோமொபைல் தொழில் துறை பயணித்து வருகிறது’’ என்று கூறினார்.

ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த அரண்மனை பற்றி தெரியுமா ?

கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மோட்டார் வாகன உதிரிபாக தொழில்துறையின் மொத்த தொழில் மதிப்பு என்பது ரூ.2.65 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் அரை இறுதியை ஒப்பிடும்போது இது 34.8 சதவீதம் அதிகமாகும்.


Royal Enfield Super Meteor 650

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் புல்லட் எனப்படும் ராயல் என்ஃபீல்ட் பைக்கிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. புல்லட் ஓட்டினாலு ஒரு கம்பீரம் தான். அப்படி வயது வித்தியாசமில்லாமல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ராயல் என்ஃபீல்ட் காலத்திற்கு ஏற்றவாறு புதுப் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ஆர்இ 650 அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பைக் ரூ.3,48,900-முதல் (ஷோரும் விலை) கிடைக்கிறது. மூன்று மாடல்களில் வெளியாகியுள்ள இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்

சோலோ டூரர் அஸ்ட்ரால் – ரூ.3,48,900(ஷோரும் விலை),  சோலோ டூரர் இன்டர்செல்லர்- ரூ. 3,63,900(ஷோரும் விலை), கிராண்ட் டூரர் செலஸ்டியல் – ரூ. 3,78,900(ஷோரும் விலை). நவீன டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், டிரிப்பர் நேவிகேஷன்கள் என அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் இந்த பைக்குகளில் இருக்கிறது. மூன்று வண்ணங்களில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த பைக்குகள். 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட்மென்டுகளுடன் பின்னால் இரண்டு ஷாக்அப்சாபர்கள் உள்ளது. இதனால் நீண்ட துரம் சொகுசான பயணத்திற்கு இந்த பைக்குகள் உத்தரவாதம். 648 சிசி திறன் கொண்ட பேரலல் இரட்டை பிஸ்டன்கள் கொண்ட எஞ்சின் உறுதியான சக்தி மிகுந்த ஓட்டத்தை தருகிறது.vஇந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 hp திறனை வெளிப்படுத்தக் கூடியது. ஆறு கியர்கள் கொண்ட பைக்காக ஆர்இ650 வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான உடனேயே அனைவரது கவனத்தையும் இந்த பைக்குகள் ஈர்த்துள்ளன. இந்த பைக்குகளின் சோதனை ஓட்டத்தின் போதே எஞ்சின் தனது முழு திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. கண்ணைக் கவரும் வண்ணங்களில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள் கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களின் ஆகச் சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  • 2 minute read
  • Last Updated: 
  • Tamil Nadu, India
  • Editor default picture

இந்தியா முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்

நாட்டில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. டெல்லி - காத்ரா, டெல்லி - வாரணாசி, குஜராத் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசம் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 7 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

8வது வந்தே பாரத் அதிவேக ரயில் : இந்நிலையில், செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதம்ர் மோடி, இந்தியா எல்லாவற்றிலும் சிறந்ததை விரும்புகிறது என்பதைக் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுவதாக கூறிய பிரதமர். இது புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் எனக் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகள் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயை முற்றிலும் மாற்றி அமைக்கும் என பிரதமர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தவாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய 8வது வந்தே பாரத் அதிவேக ரயில் ஆகும். இது தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களை இணைக்கும் முதல் ரயில். இந்த ரயில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா நிலையங்களிலும், தெலுங்கானாவில் உள்ள கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்

இந்த நிலையில் இந்திய ரயில்வேக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த 400 ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் 100 ரயில்கள் 'டில்டிங் ரயில்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்டிங் ரயில் என்பது சாதாரண ரயில் பாதைகளில் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பம் கொண்ட ஒரு ரயில் ஆகும். வளைந்து செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போல், வளைவுகள் கொண்ட ரயில் பாதையிலும் அதிக வேகத்தில் ரயில்களை இயக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அனைத்து அதிவேக ரயில்களையும் படிப்படியாக மாற்றியமைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள், அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இருந்து அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

வரும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

2023-24 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் திட்டங்களில் 300-400 புதிய ரயில்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய மோடி அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை புதிய வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப் கோச்சுடன் கூடிய புதிய வந்தே பாரதத்தையும் அறிவிக்கலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Tags:

  • 2 minute read
  • Last Updated: 
  • Tamil Nadu, India
  • Editor default picture

எம்ஜி மோட்டார்ஸ்

இந்திய அளவிலான மோட்டார் வாகன கண்காட்சி நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின்போது யூனிக் 7 (Euniq 7) என்ற ஹைட்ரஜனால் இயங்கும் எரிபொருள் செல் ஒன்றை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எரிபொருள் வாகனக் கொள்கை திட்டத்தின் கீழ் இந்த ஹைட்ரஜன் வாகனத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 3ஆம் தலைமுறை ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

இந்த 3ஆம் தலைமுறை தொழில்நுட்பத்திற்கு Prome P390 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் மற்றும் செயல்திறன் கொண்டதாக இந்த தொழில்நுட்பம் அமையும் என்று எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

நீராவி மட்டுமே வெளிவரும்:

சாதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற பெட்ரோல், டீசல் வாகனங்களில் புகை வெளித்தள்ளப்படுவதை பார்த்திருப்போம். அந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தும் யூனிக் 7 வாகனத்தில் வெறும் நீராவி மட்டும்தான் வெளிவருமாம். இது ஒரு காற்று சுத்திகரிப்பான் போல செயல்படும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது, ஒரு மணி நேர பயணத்தில் 150 பெரியவர்கள் சுவாசிக்கும் அளவிலான காற்றை இது சுத்திகரிப்பு செய்யுமாம்.

இந்த காரில் ஏடிஏஎஸ் மற்றும் ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. Prome P390 எரிபொருள் கட்டமைப்பானது 92 kW பவர் திறனுடன் வருகிறது என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக, மிக உயர் தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான சௌகரியம், புகையில்லா போக்குவரத்து, எரிபொருள் செலவு குறைப்பு மற்றும் குறைவான பராமரிப்பு தேவை போன்ற பல சிறப்புகளை கொண்டதாக இந்த கார் இருக்கும்.

நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்ப கட்டமைப்புகள் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. இது வாகனத்தை உடனடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்த தொழில்நுட்பத்தை பயணிகளுக்கான கார், மாநகர பேருந்துகள், இலகுரக லாரிகள் மற்றும் கனரக லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவிக்கிறது.

தட்பவெட்ப சூழலுக்கு உகந்தது:

ஹைட்ரஜன் எரிபொருள் கட்டமைப்பானது 95 டிகிரி வரையிலான வெப்பநிலையிலும், குறைந்தபட்சமாக மைனஸ் 30 டிகிரி குளிர்நிலையிலும் செயலாற்றக் கூடியதாகும். இதுகுறித்து எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராஜீவ் சாபா கூறுகையில், “தடையில்லா போக்குவரத்து தீர்வுகளை அளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் நாங்கள் களமிறங்கியுள்ளோம்’’ என்றார். முன்னதாக எம்ஜி4 மற்றும் இஹெச்எஸ் என்ற எலெக்ட்ரிக் வாகனங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதில் இரண்டாவது கார் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தது ஆகும்.



Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*