குழிமந்தி பிரியாணியால் கல்லூரி மாணவி மரணம், 7 நாளில் 2 உயிரிழப்பு; அறிக்கை கேட்ட அமைச்சர்!

0

கேரள மாநிலம், காசர்கோடு அருகே உள்ள அலக்காயி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி (19). மங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்துவந்த அஞ்சுஸ்ரீ பார்வதி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். கடந்த 31-ம் தேதி அஞ்சுஸ்ரீ பார்வதி ஆன்லைனில் ஆர்டர் செய்து குழிமந்தி பிரியாணி வாங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதில் அஞ்சு ஸ்ரீ பார்வதிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, மங்களூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

குழிமந்தி சாப்பிட்டதால் மரணமடைந்த நர்ஸ் ரஷ்மி ராஜ்

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அஞ்சுஸ்ரீயின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், மஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்ததாகவும் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 31-ம் தேதி ஆர்டர் செய்த உணவை மறுநாளும் அஞ்சுஸ்ரீ சாப்பிட்டதாகவும், அதனால் உணவு விஷமாக மாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கேரளத்தில் கடந்த 7 நாட்களில் குழிமந்தி சாப்பிட்டு இது இரண்டாவது மரணமாகும்.

ஏற்கனவே, ரஷ்மி ராஜ் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் ஹோட்டல்களில் பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளன.

அஞ்சுஸ்ரீ பார்வதி

இந்த நிலையில் மாணவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இடுக்கியில் ஷவர்மா சாப்பிட்ட மூன்றுபேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் ஹோட்டல்களில் பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டு மரணங்கள் குறித்து விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/E780v5S
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*