நடத்தையில் சந்தேகம்; மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்... பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்!

0

நாமக்கல் மாவட்டம், தூசூரைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர், டிராக்டர் டிரைவராக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி பிரமிளா (32). பட்டப்படிபு படித்திருக்கும் இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், தன் மனைவி பிரமிளா நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவர் ராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த சூழலில், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி பிரமிளாவை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில், அவரின் மனைவி பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பம் குறித்து கேள்விபட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட பிரமிளா

இதனிடையே, வெட்டிக்கொலை செய்யப்பட்ட பிரமிளாவின் கணவர் ராஜா, நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ``ராஜா சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பெருகி விட்டதால், டிராக்டரை விற்பனை செய்து விட்டு கூலிவேலைக்கு சென்று விட்டார் என கூறப்படுகிறது. மேலும், பிரமிளா பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், ராஜா படிக்கவில்லை என்பதால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், குடிபோதைக்கு அடிமையான ராஜா, தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தாகவும் கூறப்படுகிறது. இதனால், தன் மனைவி பிரமிளாவை ராஜா கொலை செய்திருக்கிறார்'' என்று தெரியவந்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/4SHBW2u
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*