பிறந்தநாளில் கூட்டத்தைத் தவிர்த்த அழகிரி; பண்ணை வீட்டில் முக்கிய ஆதரவாளர்களுடன் மட்டும் சந்திப்பு!

0

மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்காக கடந்த சில நாள்களாக மதுரை நகரத்தையே போஸ்டர்களால் திணறடித்த அவரின் ஆதரவாளர்கள், இன்று காலை அவருக்கு வாழ்த்துச் சொல்ல வீட்டுக்குச் சென்றபோது ஏமாந்து போனார்கள்.

அழகிரி பிறந்தநாள் விழா

பிறந்தநாளான இன்று காலையிலேயே மனைவி காந்தி மற்றும் நெருக்கமான ஆதரவாளர்கள் சிலருடன் விக்கிரமங்கலத்திலிருக்கும் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார் அழகிரி.

அழகிரி தம்பதியுடன் முபாரக் மந்திரி

தி.மு.க-வில் மீண்டும் அதிகாரத்தில் அமரப்போகிறார் என்றும் சொல்லி வரும் அழகிரியின் ஆதரவாளர்கள், அவரின் பிறந்தநாள் விழா வழக்கம்போல பிரமாண்டமாக நடக்கும் என எதிர்பார்த்தனர். அதனால்தான், அமர்க்களமாக வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர்.

ஆனால், தன் பிறந்தநாளை அமைதியாகவும், எளிமையாகவும் கொண்டாட முடிவெடுத்த அழகிரி, வீட்டில் இருந்தால் ஆதரவாளர்கள் அதிகம் வருவார்கள், முழக்கமிடுவார்கள். அதனால், தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்று நினைத்து, காலையிலயே மனைவியுடன் விக்கிரமங்கலத்திலிருக்கும் பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள்.

இசைத்தட்டு வெளியீடு

பண்ணை வீட்டில், நெருக்கமான ஆதரவாளர்களான பி.எம்.மன்னன், முபாரக் மந்திரி, உதயக்குமார், கௌஸ் பாட்சா, கோபிநாதன், எம்.எல்.ராஜ் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டவர், `அடுத்த ஆண்டு பிறந்தநாள் விழாவை எழுச்சியாக கொண்டாடுவோம்' என்று தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும், மதுரையில் பல இடங்களில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு அழகிரியின் புகழ்பாடும் விதமாக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் அவர் ஆதரவாளர்கள்.

ஆதரவாளர்களுடன் அழகிரி

மேலும், மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிலும், பைபாஸ் ரோட்டிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும் உணவு வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியவர்கள், மு.க.அழகிரி புகழ்பாடும் இசை தட்டை வெளியிட்டனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/9k3nIvC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*