போக்சோ வழக்கு; தப்பிக்க சிறுமியை திருமணம் செய்த நபர் கைது - திருமணம் செய்துவைத்தவரும் சிக்கினார்

0

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பனவூர் பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (23). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்துவந்த 16 வயது மாணவியை கடத்தி வன்கொடுமை செய்துள்ளார். போலீஸார் போக்சோ வழக்குபதிவு செய்ததுடன் அல் அமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அல் அமீன், வன்கொடுமை செய்த மாணவியின் தந்தையை அணுகி, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க உதவி செய்யும்படி வேண்டியுள்ளார். அப்படி விடுவித்தால் மாணவியை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மாணவியின் தந்தை முதலில் சம்மதிக்கவில்லை.

திருமணம் செய்துவைத்த இமாம் அன்ஸர் சதாத்

ஆனால், அல் அமீரின் உறவினர்கள் மாணவியின் தந்தையிடம் பேசி வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 18-ம் தேதி நெடுமங்காட்டிலுள்ள மாணவியின் வீட்டில் வைத்து இரவு நேரத்தில் ரகசியமாக அல் அமீன் திருமணம் செய்துள்ளார். திருச்சூரில் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் அன்ஸர் சாதத்(39) என்பவர் அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

இந்த தகவல் போலீஸுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து நெடுமங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த அல் அமீன், திருமணம் நடத்திவைத்த அன்ஸர் சதார் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அல் அமீனின் நண்பர்கள் நான்குபேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். அல் அமீன் 2021-ல் சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது ஏற்கனவே 2 பாலியல் வழக்குகளும், குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/vGroh6J
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*