பண்டைய வரலாறு[1] என்பது வரலாற்றை எழுதத் தொடங்கிய காலம் முதல் ஆரம்ப இடைக்காலம் வரை உள்ள காலம் ஆகும். எழுதப்பட்ட வரலாறு என்பது சுமார் 5,000 ஆண்டுகள் ஆகும். சுமேரிய கியூனிஃபார்ம் எழுத்துகளே முதன்முதலில் எழுதப்பட்ட எழுத்துகள் ஆகும்.[2]
பழங்காலம் என்பது கிரேக்க வரலாற்றை எழுதத் தொடங்கிய கி.மு.776ல் இருந்து தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இது அதன் சமகால நிகழ்வான ரோமாபுரி தோற்றுவிக்கப்பட்ட கி.மு.753 உடன் ஒத்துப்போகிறது. பண்டைய வரலாற்றின் முடிவு காலம் எது என்று குழப்பம் நிலவுகின்றபோதும் ரோம் வீழ்ந்த கி.பி.476 பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3][4] பிளாட்டோவின் கல்விச்சாலை மூடப்பட்ட கி.பி.529,[5] மேலும் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் இறந்த கி.பி.565,[6] இசுலாமின் தொடக்கம்,[7] அல்லது சார்லமேனின் எழுச்சி [8] போன்றவையும் பண்டைய வரலாற்றின் முடிவு காலமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் பண்டைய வரலாறு நடுக்கால அரசுகளின் ஆரம்பகாலத்தையும் உள்ளடக்கியுள்ளது. சீனாவில் பண்டைய வரலாறு என்பது கின் வம்சம் வரையிலான காலத்தைக் குறிக்கிறது.
