6ஜிபி ரேம் கொண்ட 5G போனை பட்ஜெட் விலையில் களமிறக்கும் இந்திய நிறுவனம்

0

 

6ஜிபி ரேம் கொண்ட 5G போனை பட்ஜெட் விலையில் களமிறக்கும் இந்திய நிறுவனம்.! அறிமுக தேதி இதுதான்.! | Lava Blaze 5G phone with 6GB RAM to be launched on February 10 under Rs.13,000



இந்தியாவில் பிரபலமான லாவா நிறுவனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஏற்கனவே இந்நிறுவனம் 4ஜி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா பிளேஸ் 5ஜி மாடலை கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது.


எப்போது அறிமுகம்?

இந்நிலையில் வரும் பிப்ரவரி 10ம் தேதி 6ஜிபி ரேம் கொண்ட Lava Blaze 5G அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். 6ஜிபி ரேம் தவிர Lava Blaze 5G போனின் அனைத்து அம்சங்களும் ஏற்கனவே உள்ள மாடலை போலவே இருக்கும் என்று தான் கூறப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட Lava Blaze 5G போன் ரூ.13,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

main-lava

சூப்பர் டிஸ்பிளே

இப்போது Lava Blaze 5G போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமானது இந்த லாவா ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி பிரைமரி கேமரா +டெப்த் லென்ஸ் + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த Lava Blaze 5G போன். பின்பு இந்த போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லாவா போன்.

Advertisement

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் 6ஜிபி ரேம் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கைரேகை சென்சார்

Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ்அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதேபோல் GIF, HDR, மேக்ரோ, மோஷன், நைட், பனோரமா, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன் டைம்லேப்ஸ் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகும் Lava Blaze 5G போன் ஆனது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது. மேலும் சியோமி, ரியல்மி, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது லாவா நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*