
தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் (IT Rules), மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கும் திருத்தங்களை `பேச்சு சுதந்திரத்தின்மீதான நேரடி தாக்குதல்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சாடியிருக்கிறார்.
முன்னதாக பா.ஜ.க அரசு கொண்டு வந்த திருத்தத்தில், மத்திய அரசைப் பற்றிய எந்தவொரு தவறான, அல்லது போலியான தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்குப் பத்திரிகை தகவல் பணியகத்துக்கு (PIB) அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் இடைத்தரகர்களாகக் கருதப்படுவதால், மத்திய அரசு பற்றிய போலியான அல்லது தவறான தகவல்களை யாரும் பகிரவோ அல்லது ஹோஸ்ட் செய்யவோ கூடாது எனத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மேலும் இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ``அரசால் நியமிக்கப்பட்ட உண்மை சரிபார்ப்பு பிரிவால் தவறான தகவல் எனக் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை, கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணைய நிறுவனங்கள் நீக்கத் தவறினால் அவற்றின்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இத்தகைய திருத்தம் தொடர்பாக பா.ஜ.க-வைக் கண்டித்து, ``தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் மோடி அரசு கொண்டுவந்த திருத்தங்கள் பேச்சு சுதந்திரத்தின்மீதான நேரடித் தாக்குதலாகும்.
Modi govt's Executive amendments to the Rules of the IT Act is a direct attack on free speech.Requiring social media platforms to remove posts deemed 'fake news' by the PIB is a dangerous precedent. Censorship has no place in a democracy. Repeal these amendments.#ITActAmendment pic.twitter.com/RO0aReCQmW
— Sitaram Yechury (@SitaramYechury) April 7, 2023
பத்திரிகை தகவல் பணியகத்தால் போலியானவை எனக் கருதப்படும் பதிவுகளை சமூக ஊடகங்களிடம் நீக்கக் கோருவதென்பது ஆபத்தான முன்னுதாரணமாகும். ஜனநாயகத்தில் தணிக்கைக்கு (Censorship) இடமில்லை. எனவே, இந்தத் திருத்தங்களை ரத்துசெய்யுங்கள்" என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
from விகடன்
umn news
