இன்ஸ்டாகிராம் பயனாளர்களை விமர்சித்த மஸ்க்| இரானை அலறடிக்கும் மர்ம நச்சு வாயு! - உலகச் செய்திகள்

0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, ``என்மீதான கிரிமினல் குற்றச்சாட்டு, அமெரிக்காவுக்கே இழுக்கு'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஜான்சன் அண்டு ஜான்சன் பொருள்களைப் பயன்படுத்திய பெண்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன. இந்த நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைக்க 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்குவதற்கு முன்வந்திருக்கிறது.

`இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு, IQ Level 100-ஐ விடக் குறைவாக இருக்கும்' என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இரானில் ஆயிரக்கணக்கான மாணவர்களை மர்மமான நச்சு வாயு தாக்கியிருக்கிறது. இந்த நிலையில், 20 பள்ளி மாணவிகள் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் கரன்ஸி

இதுவரை இல்லாத அளவு டாலருக்கு எதிரான பாகிஸ்தான் பணமதிப்பு ரூ.287.29-ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அமெரிக்காவில் மற்றவர்களின் கார் கதவுகளை அனுமதி இல்லாமல், திறக்க முயன்ற நபருக்கு, ஐந்து ஆண்டுகள் கார்களைத் தொடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவர்மீது பல திருட்டுச் சம்பவ வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 28 வயதான ஷான்னான் பாவே என்ற பெண், துருக்கியில் உடல் எடைக் குறைப்பு தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளும்போது உயிரிழந்தார்.

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், உலகில் ஆறு பேரில் ஒருவருக்குக் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கு வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுவந்த சீருடை ஷார்ட்ஸின் நிறம் மாற்றப்படவிருக்கிறது. மாதவிடாய் நாள்களில் வெள்ளை நிறம் அசௌகரியமாக இருப்பதால், வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நிதித்துறையில் 100 செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலில், ஐந்து இந்திய வம்சாவளிப் பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*