``உலகின் 'விஸ்வகுரு'; இந்தியாவுடன் புதிய உறவைத் தொடங்க விரும்புகிறோம்'' - உக்ரைன் சொல்வதென்ன?

0

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்திருக்கும் உக்ரைன் வெளியுறவு இணை அமைச்சர் எமின் தசபரோவா (Emine Dzapharova) இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியை (Meenakshi Lekhi) சந்தித்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். அதில், ``இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும்,"உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது, இந்திய நிறுவனங்களுக்கு நல்வாய்ப்பாக அமையும். இந்தியா ஒரு உலகளாவிய வெற்றி நாடு என்று நினைக்கிறேன். உண்மையில் உலகின் 'விஸ்வகுரு'. ரஷ்யா எங்கள் நாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிறது. உக்ரைனின் 1,500 ஆண்டுக்கால வரலாற்றில், உக்ரைன் எந்த நாட்டையும் தாக்கியதில்லை. உண்மையிலேயே இந்தியாவும், உக்ரைனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது. நமக்கு இடையே ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியாவுடன் ஒரு புதிய உறவைத் தொடங்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜெலன்ஸ்கி - மோடி

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி தன் ட்விட்டர் பக்கத்தில்," கடந்தாண்டு ரஷ்ய அதிபர் புதினை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்தபோது, இது போருக்கான நேரமில்லை எனப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். நானும் அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். உக்ரைன் அமைச்சரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒத்த கருத்துடைய இரண்டு நாடுகளும், உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு கலாசார வரைவுகள், பெண்களுக்கான அதிகாரம் ஆகிவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், உக்ரைனுக்குக் கூடுதல் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*