Tamil News Live Today: ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்யத் திட்டம்?

0

ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் இன்று தாக்கல்?!

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆகியோரை வலியுறுத்தும் விதமாக தமிழக அரசு இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, சட்டசபை குறித்தும் தமிழகத்தில் நடைபெற்ற கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இந்த நிலையில்தான் தமிழக அரசு இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*