
``இதனை தூத்துக்குடியில் ஆளுநர் பேசுவாரா?” - உதயநிதி
தமிழக ஆளுநர் ரவி குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், மாநில சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஒப்புதல் அளித்து மக்களின் பிரதிநிதிகள் சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார். தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம் 100 நாள்கள் நடந்தது. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பெரும் போராட்டத்தை வெளிநாட்டு நிதியால் தான் நடத்தப்பட்டது என பொது மேடையிலோ, அல்லது தூத்துக்குடியிலோ ஆளுநர் பேசுவாரா? என்று சவால் விடுகிறேன். ஆளுநர் மாளிகையில் இருந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம்...” என்றார்.
from விகடன்
umn news
