செல்லாது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0

 



2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


டெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.




2000 rupee notes to be withdrawn from circulation : RBI 



கருப்பு பணம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுக்கும் விதமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் முதல் மக்கள் மத்தியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.



எனினும் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் கணிசமாக குறைந்தது. புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பெருமளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்றே பரவலாக பொதுமக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.




2000 rupee notes to be withdrawn from circulation : RBI 

image"டோட்டலா மாறுதே".. புதுசு கண்ணா புசுது.. இன்னும் 8 நகரங்களா? மத்திய சூப்பர் அதிரடி..காரணம் தெரியுமா?

இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*