பி.டி.ஆரைச் சுற்றி என்ன நடக்கிறது? - கிசுகிசு: வட்டி கட்டும் 'ஷாக்' அமைச்சர் - நகை அடமானம்: உஷார்!

0

'காலைச் சுற்றிய பாம்புகள்...' - பி.டி.ஆரைச் சுற்றி என்ன நடக்கிறது..?

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இதுவரையிலான தமிழ்நாட்டு நிதியமைச்சர்களில், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டவரும் இல்லை; விமர்சனங்களுக்கு உள்ளானவரும் இல்லை. அந்த அளவுக்கு அவரைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள்.

'பி.டி.ஆர் சர்ச்சைக்குரிய மனிதரா அல்லது சர்ச்சையில் சிக்கவைக்கப்படுகிறாரா..?' என்று மதுரை தொடங்கி கோட்டை வரை விசாரணையில் இறங்கியதில், பி.டி.ஆரின் காலைச் சுற்றிய பாம்புகளாக வலம் வருபவர்கள் குறித்த தகவல்கள் அதிர வைக்கின்றன. மேலும், இவை பற்றியெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கே பி.டி.ஆர் பால் வார்த்துக்கொண்டிருப்பதாக கூடுதல் அதிர்ச்சி கிளப்புகிறார்கள் மதுரை தி.மு.க புள்ளிகள்.

பி.டி.ஆரைச் சுற்றி என்ன நடக்கிறது..?

ஏன் இத்தனை பிரச்னைகள்..?

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

" 'திராவிட மாடல்' என்பது அறிவார்ந்த மக்களுக்கு புரியும்..!" - ஆளுநருக்கு ஸ்டாலின் மறைமுக பதிலடி!

படிக்க இங்கே க்ளிக் செய்க...

கிசு கிசு: இன்னமும் வட்டி கட்டும் 'ஷாக்' அமைச்சர்!

கிசுகிசு

ங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற சினிமாப் புள்ளிகள், முதன்மையானவரை நேரில் சந்தித்தார்கள். 'முதன்முறையாக முதல்வரைச் சந்திக்கையில் வாழ்த்து மட்டும் பெறுங்கள். அடுத்த சந்திப்பில் கோரிக்கை வைக்கலாம்' என அலுவலக ஆட்கள் அறிவுறுத்தினார்களாம்.

அதனால், சினிமா விருதுகள் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் வைக்காமல் சம்பிரதாயச் சந்திப்பாக மட்டும் கும்பிட்டுவிட்டு வந்தார்களாம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள்.

கிசு கிசு பகுதியில் மேலும்...

* ஒன்று கூடிய சின்ன தலைவியின் சொந்தங்கள்

* கடனுக்கு வட்டி கட்டும் 'ஷாக்' அமைச்சர்

* துணிவானவர் நடத்திய ஆலோசனை,

* ஆர்வம் காட்டாத முதன்மையானவர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

ராமநாதபுரம்: மகளை கர்ப்பிணியாக்கிய கொடூரத் தந்தை!

பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதன் 45 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் அமுதனின் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மனைவி இறந்த சில மாதங்களிலேயே தன்னுடைய காமப் பசிக்கு மகளை இரையாக்கியிருக்கிறார் அமுதன்.

பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

பற்றி எரியும் மணிப்பூர்... களத்தில் ராணுவம் - என்ன நடக்கிறது?

மணிப்பூர் கலவரம்

'ணிப்பூர் எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்' என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சமீபத்தில் ட்வீட் செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்தது ஒட்டுமொத்த இந்தியாவையே மணிப்பூரின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது.

இது மட்டுமின்றி, அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கலவரங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகள் காண்போரை கண்கலங்கச் செய்கின்றன.

எதனால் இந்தக் கலவரம்?

இனப் பிரச்னை எப்படி, இவ்வளவு பெரிய கலவரமாக வெடித்தது?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

நகை அடமானம்... உஷார் மக்களே!

போலீஸ் கைப்பற்றிய நகை மற்றும் பணம்

வசரச் செலவுக்கு பணம் தேவை எனில், நமக்கு உடனடியாகக் கைகொடுப்பது தங்க நகைகள் தான். வங்கிகளிலோ, தனியார் நிதி நிறுவனங்களிலோ, சிறு நகைக் கடைகளிலோ தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெறுவது வழக்கம்.

இப்படி அடமானம் வைக்கப் பட்ட நகைகளைத் திரும்பப் பெறும்போது கவனமாக இல்லாவிட்டால், என்ன நடக்கும் என்பதை வாசகர் ஒருவர் தனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தின் மூலம் எடுத்துச் சொல்கிறார்.

இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் அந்த வாசகரின் அனுபவத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

பண மோசடி குற்றச்சாட்டு: மணப்புரம் ஃபைனான்ஸ் சிஇஓ-வின் சொத்து முடக்கம்!

படிக்க இங்கே க்ளிக் செய்க...

' கோவிட்: இனி கவலை இல்லை!' 

Covid

டந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து பல உயிர்களை பறித்தது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 69 லட்சம் பேர் உயிரிழந்தனர்

இந்நிலையில் இப்போது, கொரோனாவால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனமான WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கோவிட் தொடர்பான அவசரக் குழு கூட்டத்தை தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

சினிமா விமர்சனம்: தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி விமர்சனம்

டக்கப் போகும் சம்பவங்களை முன்பே கண்டுபிடிக்கும் `தீர்க்கதரிசி' என்கிற முகம் தெரியாதவரின் குரலுக்கும், அக்குரலால் அலைக்கழிக்கப்படும் சென்னைக் காவல்துறைக்கும் இடையிலான `ஒளிந்து பிடித்து' விளையாட்டுதான் இந்தத் திரைப்படம்.

மக்களால் 'தீர்க்கதரிசி' என அழைக்கப்படும் அந்த மர்ம குரல் யாருடையது, அவரைக் காவல்துறை கண்டுபிடித்ததா, அவரின் பின்னணி என்ன, அவருக்கு எப்படி நடக்கப் போகும் சம்பவங்கள் முன்னமே தெரிகின்றன போன்ற கேள்விகளுக்கு, பி.சதீஷ்குமாரின் அதிவேக திரைக்கதையில் சில பல லாஜிக் மீறலோடு பதில் சொல்லியிருக்கிறார்கள் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும்.

படம் குறித்த விரிவான விமர்சனத்தை படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

சினிமா விமர்சனம்: குலசாமி

படிக்க இங்கே க்ளிக் செய்க...

மிஸ்டர் மியாவ்: 'வடிவேலுவின் உண்மையான ரீ-என்ட்ரி'

வடிவேலு

"சூர்யாவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' என்கிற ஒரே ஒரு படம்தான் ஓடவில்லை. பாண்டிராஜை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்கள் முன்னணி ஹீரோக்கள்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் பல சுவாரஸ்யமான கோடம்பாக்க செய்திகள்...

* அஜித் பட டைட்டில்... அலையடிக்கும் விமர்சனங்கள்!

* போராட்டத்தில் 'டான்' சிபி சக்கரவர்த்தி!

* 'வடிவேலுவின் உண்மையான ரீ-என்ட்ரி'

* சம்பளத்தில் கறார் காட்டும் 'கதை சுடும்' இயக்குநர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*