`சாவர்க்கர் பிறந்த நாளில் இதை செய்திருக்கக் கூடாது’
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் பிரதமர் அல்ல’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெறுவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதில் பங்கேற்காது என அக்கட்சியின் மக்களவைத் தலைவர் சுதீப் தெவித்திருக்கிறார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ``புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ, குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ என்ற விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கர் பிறந்த நாளில் இதை செய்திருக்கக் கூடாது” என்றார்
from விகடன்
umn news
