நாசரின் பதவி பறிப்பு பின்னணி - அமைச்சர் ரேஸில் முந்திய TRB ராஜா - அலறவிட்ட வெற்றிகரமான இயக்குநர்!

0

வாரிசு `அட்ராசிட்டி’... அலட்சியம், சர்வாதிகாரம் - நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு பின்னணி!

அமைச்சர் நாசர்

இதுவரை தமிழ்நாடு அமைச்சரவைக்குள் மாற்றம் இருந்ததே தவிர, அமைச்சர்கள் யாரும் பதவி இறக்கம் செய்யப்படவில்லை. ஆனால், இந்தமுறை ஆவடி சா.மு. நாசர் அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பறித்திருக்கிறார். மூன்றாவது முறையாக மாற்றத்துக்குள்ளாக்கப்பட்ட அமைச்சரவையில் இருந்து முதல்முறையாக நாசர் தூக்கியடிக்கப்பட்டிருப்பது பேசுப் பொருளாகியிருக்கிறது.

அமைச்சர் பதவி பறிபோகும் அளவுக்கு நாசர் என்ன செய்தார் என்ற பின்னணி குறித்து அறிவாலய சீனியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"நாசரின் அட்ராசிட்டி 'திராவிட மாடல்' என்ற முன்னெடுப்புக்கு தடையாக இருப்பதாக தலைமை கருதியது. அதன்படியே, நாசரின் அமைச்சர் பதவி பறிக்கபட்டு இருக்கிறது." என்றனர் விரிவாக...

விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

அமைச்சராகும் டி.ஆர்.பி.ராஜா... 'டெல்டா' ரேஸில் முந்தியது எப்படி? 

பூண்டி கலைவாணன் - டி.ஆர்.பி.ராஜா

தி.மு.க அமைச்சரவையில் மாற்றம் நிகழப்போவதாகவும், புதியவர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக வெளியான செய்திகள் தி.மு.க-வினரை பரபரக்க செய்திருந்தன.

இந்தச் சூழலில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி.கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி தொடங்கியது.

இந்த நிலையில், டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் பூண்டி.கலைவாணன் உள்ளிட்ட மற்ற தரப்பினர் அப்செட் ஆகி உள்ள நிலையில், கடும் போட்டிகளுக்கிடையே டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது எப்படி..?

விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

டிடிவி - ஓ.பி.எஸ்ஸின் திடீர் சந்திப்பும் பின்னணி கணக்குகளும்...

ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த திடீர் சந்திப்பு மூலம் இருவருக்கும் என்ன லாபம்..? பின்னணி கணக்குகளை அலசும் விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மிஸ்டர் கழுகு: 'பன்னீரைப் பலிகடா ஆக்கிய சபரீசன்'

ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன்

"சேப்பாக்கத்தில் நடந்த பன்னீர் - சபரீசன் சந்திப்பு தற்செயலாக நடந்தது" என்று பன்னீர் தரப்பினர் சொல்கிறார்கள். அதே சமயம் டி.டி.வி-யையும் சந்தித்திருக்கிறார் பன்னீர். இந்த இரண்டு சந்திப்புகளின் பின்னணி தகவல்களைத் தருகிறார் கழுகார்.

மேலும், தனது பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகளின் மனநிலையை அறிந்துகொள்ள எடப்பாடி போட்டிருக்கும் திட்டம், ஆளுநர் எதிர்பார்த்தது போன்றே நடந்துகொள்ளும் தி.மு.க, கொங்கு அமைச்சருக்கும் உயரதிகாரிக்கும் இடையிலான பனிப்போர்... என கழுகார் தரும் பல உள்ளடி தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடனில்...

படிக்க இங்கே க்ளிக் செய்க...

'மம்தா பிரதமராக வேண்டும்..' - காரணம் சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி!

மம்தா பானர்ஜி - சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். குறிப்பாக சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், 'உங்களின் 56 இன்ச் மார்பை நிரூபித்துக்காட்டுங்கள் அல்லது அதானியின் அறிவுரைப்படி சீனாவிடம் சரணடையுங்கள்' என மோடியைச் சாடியிருந்தார்.

இந்த நிலையில், " மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்" எனக் கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளார்.

படிக்க இங்கே க்ளிக் செய்க...

IPL Daily Round Up: கோலியின் கிஃப்ட் முதல் இன்ஸ்டா சண்டை வரை!

மேக்ஸ்வெல், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா

நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடியது. நேற்றைய ஆட்டத்திற்கு முன்னர், வான்கடே மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்தார். பயிற்சியை முடித்துவிட்டு பெவிலியனுக்கு படியேறிய போது, மைதானத்தில் 'பால் பாய்' வேலை பார்க்கும் ரசிகர் ஒருவர், விராட் கோலியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

விராட் கோலி சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்தவரிடம், "அந்தப் பையனுக்கு ஆட்டோகிராப் போட்ட பேட் கொடுத்துடுங்க!" என்று தெரிவித்துவிட்டு கிளம்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

Dhoni: ஆஸ்கர் நாயகர்களைச் சந்தித்த தோனி; பொம்மன் பெல்லியைக் கௌரவப்படுத்திய CSK!

பங்கு முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

பங்குச் சந்தையில் முதலீடு என்பது ஷாப்பிங் போன்றது அல்ல. வீட்டைவிட்டுக் கிளம்பும்போது தேவையான ஒரு பொருளை வாங்குவதுதான் நம் நோக்கம். ஆனால், பல ஷாப்பிங் பைகளுடன் வீடு திரும்புகிறோம். இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் பயன் படுத்துவதில்லை. வாங்கிய பின் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் கிடக்கும்.

அதேபோன்று தான் பங்குச் சந்தையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பங்குகள் ஒவ்வொரு நாளும் வர்த்தகமாகின்றன. நிதி ஆலோசகர்கள்/ நிபுணர்கள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஆலோசனைப் பார்வை இருக்கிறது. அதே சமயம் லாபத்துக்கு வழிவகுக்கும் குவாலிட்டி இன்வெஸ்டிங் எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் நிதி ஆலோசகரும் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜருமான ஆஷிஷ் நாய்க்...

படிக்க இங்கே க்ளிக் செய்க...

க்ரில் செய்த உணவுகள்... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

'ட்ரீட்' என்றால், இப்போது பார்பெக்யூ விருந்து என்று மாறியிருக்கிறது. எக்கச்சக்க அயிட்டங்கள்... நான்கைந்து மணி நேரம் நீளும் விருந்து எனப் புதுமையான பார்பெக்யூ கலாசாரம் இந்தத் தலைமுறையினரை ஈர்த்துவருகிறது.

"கொழுந்துவிட்டு எரியும் தீயில் சமைக்கப்படும் தந்தூரி உணவுகளைவிட, பார்பெக்யூ உணவகங்களில் பரிமாறப்படும் க்ரில் செய்யப்பட்ட உணவுகள் ஓரளவு ஆரோக்கியமானவை என்றாலும், விஷயம் தெரியாத நபர்கள் சமைக்கும்போது, அந்த உணவுகளே ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக மாறலாம்'' என்கிறார்கள்.

எப்படி என்பது குறித்து உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன் அளிக்கும் விளக்கங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மிஸ்டர் மியாவ்: தயாரிப்புத் தரப்பை அலறவிட்ட வெற்றிகரமான இயக்குநர்!

மிஸ்டர் மியாவ்: தயாரிப்புத் தரப்பை அலறவிட்ட வெற்றிகரமான இயக்குநர்!

சைக்கிளிங் நடிகரின் 'மிருக' படம் படுதோல்வியைச் சந்தித்த நிலையிலும் ரிலீஸுக்கு முன்னரே பிசினஸை முடித்து பக்கா லாபம் பார்க்கப்பட்டது. படத்துக்கான ஓ.டி.டி உரிமையை ரிலீஸுக்கு முன்பே வாங்கி கையைச் சுட்டுக்கொண்டவர்கள், சைக்கிளிங் நடிகருக்கு இன்னமும் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்களாம். யாரை அணுகி, இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது எனத் தெரியாமல் திண்டாடுகிறாராம் சைக்கிளிங் நடிகர்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகள்...

வேர்ல்டு நாயகன் காட்டிய வித்தை!

தயாரிப்புத் தரப்பை அலறவிட்ட வெற்றிகரமான இயக்குநர்!

குளிர்ப் பிரதேசத்தில் இளம் இயக்குநர் அடித்த கூத்து!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*