கற்பூரவள்ளி.. ஒளிஞ்சிருக்கும் அதிசயம்.. தெரிஞ்சா விடவே மாட்டீங்க.. காலை உணவில் இந்த ஒரு பழம் போதுமே | health news and Do you know what are the health benefits of Karpoora Valli Banana surpris

0

 


கற்பூரவள்ளி.. ஒளிஞ்சிருக்கும் அதிசயம்.. தெரிஞ்சா விடவே மாட்டீங்க.. காலை உணவில் இந்த ஒரு பழம் போதுமே | health news and Do you know what are the health benefits of Karpoora Valli Banana surpris



சென்னை: கற்பூரவள்ளி வாழைப்பழம் என்றில்லை, பெரும்பாலான வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாது. பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் ஆகிய பழங்களை மட்டும் "குறைந்த அளவு" சாப்பிடலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. இவர்களை தவிர, வேறு யாருமே தவிர்க்க கூடாத பழம் கற்பூரவள்ளி வாழைப்பழம்.


பொதுவாக, வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை அறிந்தாலே அதன் மகத்துவம் தெரிந்துவிடும்.. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.

ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், இதுவே ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள்.

கற்பூரவள்ளி: இதில், மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழம் கூடுதல் பலன் தரக்கூடியது. இதற்கு தேன் வாழைப்பழம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.. பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால், சத்துக்களும், சுவையும் அபரிமிதமாக இருக்கும்..

சாம்பல் கலந்த பச்சை கலரிலும், மஞ்சள் நிறத்திலும் இந்த பழங்கள் காணப்படும்.. இதன் தோல், கருத்துவிட்ட பின்பும், இந்த பழம் சாப்பிடக்கூடியது.. ருசி அப்போதும் மாறாது.. அதேபோல, இந்த பழத்தின் நடுவில் விதைகள் சற்று அதிகமாகவே காணப்படும். பழத்துடன் சேர்த்து, இந்த விதையை மெல்லும்போது, தனிருசி கிடைக்கும்.

எடை குறைப்பு: இந்த கற்பூரவள்ளியில், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. இவை அனைத்துமே உடல் எடையை குறைக்க உதவுகிறது.. இதில் அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது... கால்சியம் அதாவது, மேங்கனீஷ், மெக்னிஷியம் மிகுதியாக உள்ளதால், எலும்புகளுக்கு நன்மை பயக்கிறது.. வலு சேர்க்கிறது.


அதேபோல, உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆறுவதற்கும், கற்பூரவள்ளியே பெரிதும் துணைநிற்கிறது.. தலைபாரம் அதிகமாக உள்ளவர்கள், கற்பூரவள்ளி பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூட்டை தனித்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

மன அழுத்தம்: எத்தனையோ பேர், நேரமின்மை, டயட் இப்படி எத்தனையோ காரணங்களுக்காக காலை நேரத்தில் சாப்பிடுவதில்லை.. காலை நேர உணவை தவிர்ப்பவர்களுக்கு இந்த கற்பூரவள்ளி பேருதவி புரிகிறது.. காலையில் இந்த பழத்தை சாப்பிடும்போது, நாள் முழுவதும் ஆற்றலை தருகிறது.. களைப்பை அண்டவிடாது.. முக்கியமாக மன அழுத்தத்தையும் அண்டவிடாது.. ஏழைகளும் வாங்கி சாப்பிடக்கூடிய, இயற்கை பொக்கிஷம்தான் இந்த கற்பூரவள்ளி வாழைப்பாம்..!!



Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*