Mission Impossible Dead Reckoning Part 1 Review: AI v டம கரஸ; இநத ஆகஷன டரட மரடடகறத?

0

உலகத்துக்குப் பேராபத்தை உண்டாக்கும் வில்லன், தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் போகும் ஹீரோ... பாண்ட், மிஷன் இம்பாஸிபிள் படங்களுக்கேயான அதே பழைய ஒன்லைன்தான். ஆனால், அதில் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப AI-யை வில்லனாக்கினால் அதுவே `மிஷன் இம்பாஸிபிள்: டெட் ரெக்கனிங் பார்ட் 1' (Mission Impossible Dead Reckoning Part 1). ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கப்படும் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்று கட்டுப்பாடு இழந்து தானாக செயல்படத்தொடங்குகிறது. இதை 'என்டிடி' (Entity) என அழைக்கிறார்கள். மொத்த டிஜிட்டல் உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திறன்கொண்ட இந்த என்டிடியை ஒரு சாவி கொண்டு கட்டுக்குள் கொண்டுவர முடியும். இருபாகங்களாகப் பிரிந்துகிடக்கும் சாவியைக் கண்டுபிடித்து என்டிடியை தங்கள் வசமாக்க துடிக்கின்றன உலக நாடுகள். ஒருபுறம் என்டிடி தனியாக ஸ்கெட்ச் போட்டு ஒரு குழுவை வைத்து அதன் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இது தொடர்பான மிஷன், நாயகன் ஈத்தன் ஹன்ட்டின் IMF எனப்படும் இம்பாஸிபிள் மிஷன் ஃபோர்ஸுக்கு வந்துசேர, அவர் யார் பக்கம் நின்றார், பரபர ஆக்‌ஷன் சாகசங்களில் என்ன நடந்தது என்பதுதான் இந்த 'மிஷன் இம்பாஸிபிள்: டெட் ரெக்கனிங்' முதல் பாகத்தின் கதை. Mission Impossible Dead Reckoning Part 1 ஆக்ஷன், பரபரப்பு, சாகசம் எல்லாம் சூப்பர் பாஸ்... ஆனா லாஜிக்? எப்படியிருக்கிறது Mission: Impossible – Fallout? #MI6 ஆனால், கதைக்காகவா நாம் 'மிஷன் இம்பாஸிபிள்' ரக படங்களை பார்க்கப்போகிறோம். விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்தான் இந்தப் படங்களின் அடிநாதமே! அதில் இம்முறையும் எந்தக் குறையும் வைக்கவில்லை இயக்குநர் கிறிஸ்டோபர் மேக்குவரி. 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் கடந்த இரண்டு பாகங்களை இயக்கியவரும் இவர்தான். கதையோட்டத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சரியான வெளி அமைத்து, அது ஓவர்டோஸ் ஆகிவிடாமல் நம்மை இருக்கை நுனியிலேயே வைத்திருப்பதில் வெற்றிகாண்கிறார். படத்தில் ஈத்தன் ஹன்ட்டின் மிஷன் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் முந்தைய பாகத்தை விட மிரளவைக்கும் ஸ்டண்ட்களைச் செய்துவிட வேண்டும் என்பதே டாம் க்ரூஸின் மிஷனாக இருக்கிறது. Mission Impossible Dead Reckoning Part 1 ஏற்கெனவே வைரலான மலையிலிருந்து பைக்கில் நிஜமாகவே அவர் குதிக்கும் ஸ்டண்ட், படத்தில் வரும் இடமும் அதன் காட்சியமைப்பும் மிகச்சிறப்பு. இது அல்லாமல், ரோம் தெருக்களில் நடக்கும் கார் சேஸ், அபுதாபி விமான நிலையத்தில் நடக்கும் 'கேட் அண்ட் மௌஸ்' ரக தேடுதல் காட்சிகள், வெனீஸ் நகரில் நடக்கும் சண்டைக்காட்சிகள் எனக் குறிப்பிட்டு சொல்ல ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக ட்ரெயினில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், VFX என மொத்த டெக்னிக்கல் குழுவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். `வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல' என்னும் வசனம் ஹாலிவுட்டில் டாம் க்ரூஸுக்குதான் மிகச்சரியாகப் பொருந்தும். ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் மனுஷன் வசீகரிக்கிறார். மிஷன் இம்பாஸிபிள் பிரான்சைஸுக்குப் புதுவரவான, 'பிக் பாக்கெட்' எக்ஸ்பெர்ட்டாக வரும் ஹெய்லி அட்வெலுக்கும் டாம் க்ரூஸுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்தின் மற்றுமொரு ஹைலைட். விறு விறு ஆக்ஷனுக்கு நடுவே ஆங்காங்கே காமெடி ஒர்க்-அவுட்டாவது இவர்களால்தான். Mission Impossible Dead Reckoning Part 1 நண்பர்களும் சக IMF குழுவினருமான சைமன் பெக், விங் ராமேஸுக்கு ஹீரோவுக்கு உதவும் அதே வழக்கமான பணிதான். முந்தைய பாகங்களில் வந்த ரெபேக்கா பெர்குசன், வானீஷா கிர்பி என அனைவரும் தங்களுக்கான பணியை இதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். புதிய வில்லனாக வரும் எசாய் மொரேலஸ் மிரட்டுகிறார். மார்வெல் படங்களில் மான்டிஸ் கதாபாத்திரமாக வரும் பாம் க்ளெமென்டிஃப் இந்தப் படத்தில் அதிரடிமுகம் காட்டுகிறார். தொடர்ந்து 'மிஷன் இம்பாஸிபிள்' படங்கள் பார்த்து வருபவர்களுக்கு இந்நேரம் முகத்தை மாற்றும் தொழில்நுட்பம் பழகிப் போயிருக்கலாம். ஆனால், முதல்முறையாக பார்ப்பவர்களுக்கு 'என்னடா காதுல பூ சுத்துறீங்க' உணர்வு இந்தப் படத்திலும் ஏற்படுவது உறுதி. நிஜ வாழ்வில் சாத்தியமற்ற பல விஷயங்கள் படத்தில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இஷ்டம்போல் சாட்டிலைட்டை ஹேக் செய்வது, யாரும் கவனிக்காமல் ஜாலியாக விமானநிலைய கூரைக்கு மேல் ஏறி டாம் க்ரூஸ் ஓடுவது என இதற்கு பெரிய பட்டியல் ஒன்றையே போடமுடியும். `மிஷன் இம்பாஸிபிள் படங்களில் லாஜிக் எல்லாம் எதுக்கு தேடுறீங்க' என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் புரிகிறது. நியாயம்தான் ஆனால், சில டெம்ப்ளேட் காட்சிகளையும் கிளிஷே ட்விஸ்ட்களையும் தவிர்க்கலாம் என்பதை அவர்களுமே ஒப்புக்கொள்வார்கள். Mission Impossible Dead Reckoning Part 1 இரண்டே முக்கால் மணிநேர படத்தின் இறுதிக்கட்டங்களில் சோர்வு ஏற்பட்டாலும், விறு விறு க்ளைமாக்ஸ் அதைச் சரிகட்டிவிடுகிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் இது ஒரே கதையை இரண்டு பாகங்களாக பிரிக்கும் சீசன் போல. சமீபத்தில் வந்த 'ஸ்பைடர்வெர்ஸ்', 'ஃபாஸ்ட் X' படங்கள் போல பாதி கதையைதான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார். மீதி கதை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் 'மிஷன் இம்பாஸிபிள்: டெட் ரெக்கனிங் பார்ட்-2'-வில்தான் தெரியும். மொத்தத்தில், சில குறைகளைத் தவிர்த்து பார்த்தால், இந்த ஆண்டு ஆக்ஷன் ரசிகர்கள் மிஸ் செய்துவிடக்கூடாத திரை அனுபவத்தை தருகிறது மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் இந்த ஏழாம் பாகம். இந்த மிஷன் சக்சஸ்தான்! from Movie Reviews Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*