
ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பில் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கிறது தேவரா திரைப்படம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொதுவாக பெரிய நடிகர்கள் படங்கள் வெளியீட்டின்போது ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டங்கள் இருக்கும். எல்லை இல்லாத இந்த கொண்டாட்டங்களில் அடிக்கடி சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது.
ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இந்த நிலையில், தேவரா பட ரிலீசை ஒட்டி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தை ஜூனியர் என்.டி.ஆரின் போஸ்டரில் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை முன்னிட்டு தெலுங்கு ரசிகர்களின் நடத்தையை இணையவாசிகள் கேள்விக்குட்படுத்தி வருகின்றனர். "தேவரா FDFS கொண்டாட்டங்களுக்காக மிருக பலி செய்வது உச்சகட்ட முட்டாள்தனம்.

தெலுங்கு ரசிகர்கள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு பிரபலத்தின் மீதான வெறி, எத்தனை பகுத்தறிவற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்குக் காட்டுகிறது. ஒருவர் மீதான அதிகப்படியான பக்தி இந்த செயல்களை நியாப்படுத்துகிறதா... எனக் கேள்வி எழுப்பவும், ரசிகனாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை மறுபரிசீலனை செய்யவும் இதுதான் சரியான தருணம்" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி படத்தின் FDFS-க்கும் ரசிகர்கள் ஆடு வெட்டியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
Umn news
