
உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்திய திரைப்படம் `தங்கல்'. அமீர் கான் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2016-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ. 2,000 கோடி வசூல் செய்தது. ஹரியானாவின் முன்னாள் மல்யுத்த மகாவீர் சிங் போகத், தனது மகள்கள் கீதா போகத், பபிதா போகத்தை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய உண்மைக் கதையைப் பேசிய தங்கல் திரைப்படம், வசூல் மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில், மகாவீர் சிங் போகத் கதாபாத்திரத்தில் அமீர் கான் நடித்திருந்தார்.
பபிதா போகத் 2012 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், காமன்வெல்த் போட்டியில் 2010-ல் வெள்ளிப் பதக்கமும், 2014-ல் தங்கப் பதக்கமும், 2018-ல் வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கிறார். மேலும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2009 மற்றும் 2011-ல் தங்கப் பதக்கமும், 2013 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் பபிதா போகத் வென்றிருக்கிறார். பின்னர், 2019-ல் மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெற்று பபிதா போகத் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இந்த நிலையில், தங்கல் படம் ரூ. 2,000 கோடி வசூலித்தபோதும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரம் குறித்து பபிதா போகத் பேசியிருக்கிறார்.
தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பபிதா போகத்திடம், ரூ. 2,000 கோடி வசூலித்த தங்கல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று நெறியாளர் கேட்டார்.
2000 करोड़ की फिल्म, फोगाट परिवार को मिला सिर्फ 1 करोड़
— News24 (@news24tvchannel) October 22, 2024
◆ बबीता फोगाट का चाय वाला इंटरव्यू मानक गुप्ता के साथ
◆ पूरा इंटरव्यू: https://t.co/LPKn1lwMLb@ManakGupta #ManakKaRapidFire @BabitaPhogat | #ChaiWalaInterview pic.twitter.com/Fgt843zYE1
அதற்கு, ``மொத்த வசூலில் ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள்" என்று தெரிவித்த பபிதா போகத், ``நமக்கு மக்களின் அன்பும், மரியாதையை மட்டுமே வேண்டும். மற்ற அனைத்தையும் விட்டுவிடுங்கள் என்று என் தந்தை எங்களிடம் சொல்லியிருக்கிறார்" என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தற்போது பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
from விகடன்
Umn news
