Manoj Bharathiraja: "சீக்கிரமாகப் போய்விட்டீர்கள் சகோ" - இயக்குநர் வெங்கட் பிரபு இரங்கல்

0

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

48 வயதான இவர் சில நாட்களுக்கு முன்பு இருதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (25 மார்ச்) மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்

இயக்குநர் வெங்கட் பிரபு மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில், "இந்த செய்தியைக் கேட்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது... நீங்கள் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை சகோ. மனோஜ்... சீக்கிரமாகப் போய்விட்டீர்கள்...

பாரதிராஜா மாமாவுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்."

நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் பாரதிராஜாவின் உடல் புதன்கிழமை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு உடல் பெசன்ட் நகர் மின் மயானதிற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*