Maa Inti Bangaaram Review: `லியோ', `பாட்ஷா' மோடில் சமந்தா; ஆக்ஷனில் ஜொலிக்கிறதா `எங்கள் தங்கம்'?

0

நல்லதொரு மருமகளாகப் பேர் எடுக்க நினைக்கும் பெண்ணுக்குப் பின்னாலிருக்கும் ஆக்ஷன் பக்கங்களே கதை!

ஸ்வர்ணாவை (சமந்தா) காதல் திருமணம் செய்ததால், அனிருத் (திகந்த்) தன் குடும்பத்திடமிருந்து பிரிந்திருக்க வேண்டிய நிலை. மீண்டும் அதில் இணைய ஒரு வாய்ப்பு கிட்ட, அந்தப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் முழுமையான அன்பைப் பெற்று, அந்த வீட்டின் 'எங்கள் தங்கமாக' (மா இண்டி பங்காரம்) ஜொலிப்பதை லட்சியமாக ஏற்கிறார் மருமகள் ஸ்வர்ணா.

Maa Inti Bangaaram Review

ஆனால் ஸ்வர்ணாவின் இந்த அமைதியான வாழ்க்கைக்குப் பின்னால், ரத்தச் சிவப்பான, வன்முறை நிறைந்த ஒரு இருண்ட முன்கதை இருக்கிறது. பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரகசியம், எதிர்பாராத விதமாகக் கொடூரமான வில்லன் கருணாவால் (குல்ஷன் தேவைய்யா) வெளிச்சத்திற்கு வருகிறது. தனது அன்பான குடும்பத்திற்கு வரும் ஆபத்தை ஸ்வர்ணா ஆக்ஷன் மோடில் எப்படிக் கையாண்டார் என்பதே 'மா இண்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்').

முதல் பாதியில் நகைச்சுவை கலந்த சாதுவான மருமகளாகப் பார்வையாளர்களை ஈர்க்கும் சமந்தா, அப்படியே கியர் மாற்றி புடவையுடன் சண்டைக்காட்சிகளில் விஸ்வரூபம் எடுக்கிறார். கார் சேஸிங், பேருந்துக்குள் நடக்கும் சண்டை, வீட்டுக்குள் துப்பாக்கியை லோடு செய்யும் லாகவம் என ஆக்ஷனுக்காக அவர் கொட்டியிருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. சாந்தமான சிரிப்பு, ஆக்ரோஷத்தால் துடிக்கும் கண்கள் எனத் தனது தனித்துவமான உடல்மொழியால் ஒரு முழுநீள கமர்ஷியல் 'மாஸ்' ஹீரோவாகவே அவர் மாறியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

Maa Inti Bangaaram Review

கணவராக திகந்த், தோழியாக மஞ்சுஷா மற்றும் சின்ன மருமகளாக ஸ்ரீமுகி ஆகியோரின் சிறப்பான நடிப்பு முதல் பாதி திரைக்கதைக்குச் சுவாரஸ்யம் கூட்டுகிறது. குறிப்பாக மஞ்சுஷாவின் நகைச்சுவை, அலப்பறை! கௌதமி, ஆனந்த், சைதன்யா கிருஷ்ணா எனப் பிற பாத்திரங்களும் தங்களது இருப்பினைப் பதிவு செய்கின்றனர்.

படத்தின் மற்றொரு தூண் அதன் தொழில்நுட்பக் குழு. ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குநர் லீ விட்டேக்கரின் (Lee Whittaker) ஸ்டன்ட் வடிவமைப்பு ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெரும் பலம்! குறிப்பாக, புடவை அணிந்துகொண்டு சமந்தா செய்யும் சண்டைக்காட்சிகள் நம்பகத்தன்மையுடனும், அதே சமயம் மாஸ் குறையாமலும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பிரத்யேக 'கர்னாடக ராக்' (Carnatic Rock) பின்னணி இசை, ஆக்ஷன் பிளாக்குகளில் தீயாய் வேலை செய்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு குடும்பக் காட்சிகளை மென்மையாகவும், சண்டைக்காட்சிகளை ரக்கட்டாகவும் காட்டி திரையில் விருந்து படைக்கிறது.

Maa Inti Bangaaram Review

இயக்குநர் நந்தினி ரெட்டி மற்றும் கிரியேட்டர் ராஜ் நிடிமோரு கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், நமக்கு மிகவும் பரிச்சயமான 'பாட்ஷா', 'தெறி', 'லியோ' படங்களின் அதே 'அடையாளங்களை மறைத்து வாழும்' கதாபாத்திரம் டெம்ப்ளேட்டைத்தான் கையில் எடுத்துள்ளது. ஆனால், அதில் ஒரு பெண்ணை மையப்படுத்தி, தெலுங்கு சினிமாவின் குடும்ப சென்டிமென்ட்களை கலந்து, மிக நேர்த்தியாகக் கையாண்ட விதம்தான் புதுமை சேர்க்கிறது.

நூறு சாமி விமர்சனம்: அம்மா, சாமியல்ல மனுஷி! நெகிழ வைக்கிறதா மறுமணம் குறித்த எமோஷனல் டிராமா?

முதல் பாதியில் குடும்ப சென்டிமென்ட், கலாசாரப் பின்னணியிலிருந்து விலகியிருக்கும் சமந்தா, மருமகள்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி போன்றவை நல்லதொரு கலாட்டா! ஆனால், தேவைக்கு அதிகமாகவே அவை நீள்வதால் 'ஆக்ஷன் மோடு எப்ப சார்?' என வாய்விட்டே கேட்க வைக்கிறார்கள். அதன் பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதை, வில்லனின் ரீ-என்ட்ரி, அது தரும் பரபரப்பு என நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது போன்ற உணர்வைத் தந்தாலும் அந்த இடைவேளை காட்சி ஆறுதல்! முதலமைச்சர் வருகை, அதன் பின் நடக்கும் சதி, சமந்தாவின் ரகசியம் வெளிப்பட்டுவிடும் ஆபத்தான நிலை என இரண்டாம் பாதிக்கு அங்கே நல்லதொரு ஸ்கெட்ச் போட்ட உணர்வு!

Maa Inti Bangaaram Review

ஆனால், ஆரம்பத்தில் மிரட்டலாக அறிமுகமாகும் வில்லன் குல்ஷன் தேவைய்யா கதாபாத்திரம், சமந்தாவின் மாஸ் அவதாரத்துக்குப் பிறகு வழக்கமான அடிவாங்கும் வில்லனாக மாறி டம்மியாகிப் போவது ஏமாற்றமே! திருமண வீட்டில் அவர் செய்யும் கலாட்டாவிலும் சுவாரஸ்யமில்லை. இதுதான் க்ளைமாக்ஸ் என்று தெரிந்த பின்னரும், குல்ஷன் - சமந்தா சந்திப்பு காட்சியும், வீட்டுக்குள் நடக்கும் க்ளைமாக்ஸ் ஷூட் அவுட்டும் தேவைக்கு அதிகமாகவே நீண்டுவிட்ட உணர்வு! அதேபோல, சமந்தாவின் பாத்திரம் ஆக்ஷனில் கபடி ஆடுகிறதே தவிர, புத்திசாலியாக எதுவும் செய்யாமல் ஏமாற்றவே செய்கிறது. க்ளைமாக்ஸில் வரும் வெண்ணிலா கிஷோரின் நகைச்சுவை கேமியோ, அநாவசியம் என்றாலும் சிரிக்க வைப்பது ஆறுதல்!

சமந்தாவின் இந்த மிரட்டலான ஆக்ஷன் அவதாரம், தங்கப் பதக்கம் வென்று ஜொலிக்கவில்லை என்றாலும் ஆறுதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

from Movie Review | திரை விமர்சனம்
Umn news <a

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*