புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பூனத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(34). இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி கர்பமானதால், சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் பெற்றோர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் பாக்கியராஜை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இப்போது வயது 23. அவர் குழந்தைக்கு தற்போது 6 வயதாகிறது. இந்நிலையில், இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ.20,000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைக் கட்ட தவறினால், மேலும் மூன்று ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை இருப்பதால், அவருக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு வி.ஏ.ஓக்கு 14ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கொடுத்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தின் தொடர் அதிரடி தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு ஆறுதல் அடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
Also Read: புதுக்கோட்டை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-க்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pbbPDF
via
