புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை! - ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-க்கு 14 ஆண்டு சிறை தண்டனை

0

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கங்காணிப் பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான, இவர் கடந்த 12.3 2019-ல் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காடப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒருவருடங்களுக்கும் மேலாக நடந்து வந்தது.

வழக்கினை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, "மனநலம் பாதிக்கப்பட்டச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக காடப்பனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ. 3,50,000ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இதில் ரூ. 2,50,000 ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் அவர் தெரிவித்திருந்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2WnoeYG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*