தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு.
கடந்த 2 ஆண்களுக்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் கடந்த 8 மாதமாக விசாரணை தடைபட்டது. இதுவரை, 775 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு, 586 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 23 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது விசாரணை ஆணையம். கடந்த 5 நாட்களாக நடந்தவந்த 23வது கட்ட விசாரணையில் 49 பேர் விசாரணை செய்யபட்டனர்.
விசாரணையின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேலிடம், “விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவார்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இம்மாதத்தில் சம்மன் அனுப்பப்பட்டு அடுத்தமாதம் நடைபெறவுள்ள 24வது கட்ட விசாரணையின்போது ரஜினிகாந்த் விசாரணைக்கு அழைக்கப்படுவார்” என்றார். இந்நிலையில், அடுத்த மாதம் 19-ம் தேதி தூத்துக்குடி பீச்ரோட்டில் அரசினர் சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் ஒருநபர் விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகிட இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் கலவரம் ஏற்பட சமூக விரோதிகளின் ஊடுருவல்தான் காரணம்” எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த சர்ச்சைப்பேச்சு பல தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, “ரஜினியை விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த வேண்டும்” எனப் பல தரப்பினரும் ஆணையத்தில் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆஜராகிட சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு படிப்பிடிப்பு பணிகள் இருப்பதாலும், தான் தூத்துக்குடிக்கு வந்தால் தன்னைக் காண அதிகப்படியான ரசிகர்கள் திரள்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதனால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும் படியும், ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் கோரிக்கை மனுவை ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி ஆணையத்தில் சமர்ப்பித்தார். ரஜினியின் இரண்டு காரணங்களில் முதல் காரணத்தை மட்டும் ஆணையம் ஏற்றுக் கொண்டது. ஏற்கெனவே 17-ம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அடுத்தமாதம் 19-ம் தேதி நேரில் ஆஜராகிட இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது ஆணையம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/38jtt14
via
