கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவைக்கையாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. புதுச்சேரியில் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று கடந்த இரண்டு மாதங்களாக குறையத் தொடங்கியிருப்பதால் 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், “வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.
அதேபோல கொரோனா பரவலுக்கு முன்பாக செயல்பட்டதைப் போல ஜனவரி 18-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் முழு நேரமும் செயல்படும். இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இளங்கலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி நிறுவனங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளை முழுமையாக திறப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்.
Also Read: `டிசம்பருக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கலாமே...’ - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தால் அவர்களை 2 ஆக பிரித்து திங்கள்கிழமை 30 மாணவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை 30 மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுதொடர்பான விரிவான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக்கு பின் பாலிடெக்னிக்குகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2LKdtOd
via
