தஞ்சாவூர்: `என்னைக் காதலிக்க வேண்டும்!’ - ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்

0

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். ராஜேந்திரன். இவரது மகன் அஜித் (24). அஜித் அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் வேலையும் செய்து வருகிறார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தஞ்சாவூர் புதிய பேருந்துநிலைய சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அஜித்துடன் அந்தப் பெண் நட்புடன் பழகி வந்துள்ளனர்.

ஆனால், அஜித் அவரை ஒரு தலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் வேலைக்கே செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். இதனால்,`நீ வேலைக்கே போகாமல் மதுகுடித்து கொண்டிருக்கிறாய். ஏன் இப்படி செய்கிறாய்?’ என கேட்டதுடன், இனிமேல் குடிக்க கூடாது என அஜித்தை அந்தப் பெண் கண்டித்துள்ளார்.

காயமடைந்த இளம்பெண்

`அப்படி குடிதான் முக்கியம் என்றால் என்னோடு பழக வேண்டாம்’ எனவும் இளம்பெண் கூறியிருக்கிறார். ஆனால், அஜித் தொடர்ந்து குடித்து வந்ததால், அஜித்துடன் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார். ஆனால் அஜித் தன்னிடம் பேசுமாறும், காதலிக்குமாறும் தொடர்ந்து வறுபுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஊரிலிருந்து இளம்பெண் பஸ்ஸில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவரோடு அஜித்தும் வந்துள்ளார்.

பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு செல்லவதற்கு புதிய பேருந்து நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறி இருக்கையில் இளம்பெண் அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த இருக்கைக்கு பின் இருக்கையில் அஜித்தும் அமர்ந்துள்ளார். அத்துடன் அவரிடம்,``நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும். நீ என்னிடம் பேசாமல் இருக்காதே’’ என அஜித் வற்புறுத்திக் கொண்டே வந்துள்ளார்.

Also Read: சென்னை: `பள்ளி மாணவிமீது ஒருதலைக் காதல்; பெண் தொழிலதிபருக்கு வந்த அதிர்ச்சி வீடியோ' - சிக்கிய மாணவன்

``உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நீ என்னை பின்தொடர்ந்து வராதே’’ என இளம்பெண் கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த அஜித், சட்டைப் பையில் வைத்திருந்த பேனா போன்ற பட்டன் கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இதனை சற்றும் எதிர்கார்க்காத அவர் வலியால் அலறியிருக்கிறார்.

பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அனைவரையும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் படிகட்டுக்கு வந்த அஜித் பஸ்ஸிலிருந்து ராமநாதன் ரவுண்டானா என்ற இடத்தில் குதித்து தப்பியிருக்கிறார். பேருந்தில் இருந்தவர்கள் சத்தம்போடவே சாலையில் இருந்தவர்கள் அஜித்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

காயமடைந்த இளம்பெண்

பின்னர், அஜித்தை தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த இளம்பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் அஜித்தை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``அஜித், அந்தப் பெண்ணைக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒரே பகுதி என்பதால் அந்தப் பெண்ணும் நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர் அஜித்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்தியிருக்கிறார்.

Also Read: திருவள்ளூர்: `கையை அறுத்து போட்டோ அனுப்பு!' - இன்ஜினீயரின் `காதல்’ விளையாட்டு

தொடர்ந்து தன்னிடம் பேசுமாறு அஜித் வறுபுறுத்தி வந்துள்ளார். கொரோனா லாக்டெளனுக்கு பிறகு கல்லூரி திறந்ததும் அஜித்துக்கு சாதகமாகிவிட, தொடர்ந்து பின்னால் வந்து காதலிக்குமாறும், பேசுமாறும் டார்ச்சர் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரே பஸ்ஸில் அந்தப் பெண்ணுடன் வந்த அஜித், `என்னைக் காதலிக்க வேண்டும். இல்லையென்றால் என்னுடன் வா வெளியே போய் ஜாலியாக இருக்கலாம்’ என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண், `என்னைப் பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்’ என கோபமாகக் கேட்டதுடன், `இனிமேல் என் பின்னால் வராதே’ என்றும் எச்சரித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அஜித்

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த அஜித், திடீரென சிறிய அளவிலான பேனாக் கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியுள்ளார். பஸ்ஸில் இருந்தவர்கள் ஏதோ திருடன் செயினை அறுத்துக்கொண்டு ஓடுகிறான் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் கழுத்தில் ரத்தம் கொட்டியதைப் பார்த்தபோதுதான் கழுத்தில் வெட்டியது தெரிந்திருக்கிறது.

அதற்குள் சாலையில் நின்றவர்கள், அஜித்தைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அந்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருக்கிறார். விசாரணையில், `ரெண்டுபேரும் காதலிச்சோம். திடீரென, என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டாள். அதனால், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அத்துடன் எனக்குக் கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என கழுத்தை அறுத்தேன்’ என அச்சமே இல்லாமல் அஜித் கூறினான். அவன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2IXuNhA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*