புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம், ஆந்திரத்தை ஒட்டி இருக்கிறது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவான மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார். இவர் எம்.எல்.ஏவாக 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டியும், புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறந்த எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காகவும் 2021 ஜனவரி 6-ம் தேதி ஏனாமில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இச்சூழலில் ஆந்திராவில் 30-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வாரிய தலைவர் பதவிகளுக்கு சேர்மன்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று இரவு விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒரே நேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பேசும்போது, "ஜெகன் மோகன் ரெட்டியைப்போல ஒரு முதல்வர் கிடைக்க வேண்டுமென புதுச்சேரி, தமிழக மக்கள் ஏக்கப்படுகிறார்கள். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது.
Also Read: “கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்” கிரண்பேடியை விளாசும் நாராயணசாமி
ஏனாம் தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நானோ, எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறேன். தேவைப்பட்டால் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெகனுடன் இணைந்து செயல்பட இருக்கிறேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3h5z5zV
via
