வேல் யாத்திரை: `அனுமதி அளிக்காதது அ.தி.மு.க அல்ல.. தமிழக அரசு!’ - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் நலமுடன் வாழ வேண்டும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். அதற்காக புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

துரதிஷ்ட வசமாக இந்த சட்டத்தை வேறு விதமாக திசை திருப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட எதிர் கட்சிகள் முயல்கின்றன. பிரதமர் மோடியின் திட்டத்தை விவசாயிகள் புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், இந்த புதிய சட்டத்தின் மூலம் வரும் முழு பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். மத்திய அரசின் புதிய சட்டத்தால் இது நாள் வரை விவசாயிகளை சுரண்டி சுரண்டி வாழ்ந்த பெரும் முதலைகள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

வேல் யாத்திரை

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும் சந்தோஷம், வாழ்த்துக்கள். பொதுவாழ்வு, அரசியலில் நல்லவர்கள் வருவது நாட்டிற்கு நல்லது. எனவே ரஜினி கட்சி தொடங்குவதை நான் ஆதரிக்கிறேன். ரஜினி கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க இல்லை. நாங்கள் எப்போதும் முன்னணியில் மட்டும்தான் இருப்போம்.

Also Read: நிறைவடைந்தது வேல் யாத்திரை... பா.ஜ.க சாதித்தது என்ன?

வேல் யாத்திரைக்கு பா.ஜ.க சார்பில் தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அந்த யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்தது. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது வருத்தம்தான். அந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்காதது அ.தி.மு.க அல்ல, தமிழக அரசு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி நல்ல நிலையில் உள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்

விஞ்ஞான பூர்வமாக அகில உலக அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. அவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தபோது ஊழல் செய்யமுடியவில்லை. இருக்குமிடம் சரியாக இருந்தால் இருப்பவர்கல் சரியாக இருப்பார்கள்" என்றார்.

இப்போது பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க ஊழல் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, "உப்பை தின்பவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்" என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/382L1yj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*