கோவையில் பிரதமர் மோடி!
தமிழகத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்திருக்கிறார். இதற்காக காலை 7:45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்பட்ட மோடி, காலை 10:25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துவிட்டு அங்கிருந்து சென்னை திரும்பி, பின்னர் விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
கோவை கொடிசியா அரங்கில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வார். தொடர்ந்து மாலை, கொடிசியா அரங்குக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க சார்பில், மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Also Read: `புதுச்சேரி முன்னேற்றத்துக்கு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்!’ - பிரதமர் மோடி
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2MnUcCF
via
