பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்த பிரதமர் மோடி முதலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி விழா அரங்கத்தில் நலத்திட்டங்களை தொடங்கி துவைத்து பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட் அவர், “புதுச்சேரியில் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியை பார்க்கிறேன். இரண்டு காரணங்களுக்காக நான் புதுச்சேரி மாநிலத்திற்கு வந்திருக்கிறேன். ஒன்று இன்று தொடங்கிய வைக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், மற்றொன்று புதுச்சேரி மக்கள் காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். புதுச்சேரி மக்கள் அதனை கொண்டாடுகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் அரசிற்கு மிகப் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்தனர். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் வாக்களித்த மக்களின் நம்பிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்து நிர்வாகங்களையும் சீரழித்துவிட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்காக வேலை செய்வதில் விருப்பமில்லை. மற்றவர்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றுவதை காங்கிரஸ் அரசு ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு ஒத்துழைக்கவில்லை. நிதியை உபயோகப்படுத்தாமல், கடல்சார் மீனவ நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தாமல் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வீடியோ காட்சி ஒன்று வைரலானது. அதில் பேசும் ஒரு பெண், புயல் மற்றும் வெள்ளத்தின் போது புதுச்சேரி அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என்பதுடன் முதல்வர் நாராயணசாமிகூட வந்து பார்க்கவில்லை என்பது குறித்தும் ராகுல் காந்தியிடம் புகாரளித்தார். வலியுடனும் வேதனையுடன் அந்த பெண் அதை கூறினார். ஆனால் அந்த பெண் கூறியதை முதல்வர் தவறாக மொழிப்பெயர்த்து, நாட்டு மக்களிடமும், கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடமே பொய்யை சொன்னவர் நாராயணசாமி. மக்கள் பிரச்னையை தவறாக கூறும் இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியுமா?
உச்ச நீதிமன்றம் பஞ்சாயத்து தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது, மக்களும் பெரிய அளவில் வாக்களித்தனர். அதே போன்று குஜராத்தின் நகரப்பகுதியிலும் தேர்தல் நடைப்பெற்றது. ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத்தில் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடத்த முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் நடத்த முடியவில்லை. கண்டிப்பாக அதற்காக மக்கள் தண்டிப்பார்கள்.
காலனி ஆதிக்கத்தின் ஆட்சியைப் போல பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் அரசு பின்பற்றி வருகின்றனர். மக்களை பிரித்து அவர்களிடம் பொய்களை கூறி ஆட்சி செய்வதை காங்கிரஸ் விரும்புகிறது. ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிராகவும், ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராகவும் சித்தரித்து அரசியல் செய்து வருகின்றனர். பொய் சொல்வதில் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய விருதுகளை கொடுக்கலாம். மீனவ நலத் துறைக்காக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் 2019-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட 80% அதிகமாக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து வருகிறனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு 100-க்கும் குறைவான இடங்களைப் பெற்றுள்ளது. மன்னர் ஆதிக்க குடும்ப தலைமுறை ஆட்சிக் கொள்கையை பாரம்பரியமாக கொண்டுள்ளது. புதுச்சேரி அரசை சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையங்களில் புதுச்சேரி சிறந்து இருக்கும் என்பதே புதுச்சேரிக்கான எனது தேர்தல் அறிக்கை. புதுச்சேரி இளைஞர்களுக்கு சரியான ஆதரவு தேவை.
அவர்கள் தகவல் தொழில்நுட்ப துறை, மருந்து துறை, நெசவு உள்ளிட்ட துறைகளில் மேம்பட வேலைவாய்ப்பு ஏற்பட இருக்கிறது. கல்வியில் மொழி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உள்ளூர் மொழியில் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் சங்கமாகும் இடமாக இருக்கிறது. குறிப்பாக ஆன்மீகம், சுற்றுலாவுக்கான இடமாக இருக்கிறது.
புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். சுற்றுலா பயணிகள் இங்கு இன்னும் அதிகளவில் வர இயலும். சுற்றுலாத்துறையில் உலக அளவில் 65-வது இடத்திலிருந்து 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். கடல் சார்ந்த துறையை மேம்படுத்துவது, அதில் கூட்டுறவு துறையை பலப்படுத்துவது உள்ளிட்டவைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். இப்படிப் பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் சுயசார்பு இந்தியா வலுப்பெறாது. சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கடற்கரை மற்றும் மீனவ சமுதாயத்தினர் இடையே மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் .
Also Read: புதுச்சேரி: `யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசியிருக்கிறார்!’ ஜெ.பி.நட்டாவை விளாசிய முதல்வர் நாராயணசாமி
சென்ற ஆண்டு மீனவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை கொடுத்துள்ளோம். மீனவர்களுக்கு கடனுதவி வழங்குவது, மீனவர்களை விவசாய கடன் அட்டை திட்டத்தில் இணைப்பது. புதிய தொழிலில் அவர்களை ஈடுபடுத்துவது என பல்வேறு திட்டங்களை கடந்த ஆண்டு வழங்கியுள்ளோம். 2014-ம் ஆண்டை விட 50% அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளோம். கூட்டுறவு துறையை துடிப்பு மிக்க துறையாக மாற்றப்படும், இது புதுச்சேரி மகளிருக்கு பயனுள்ளதாக அமையும். வருங்காலங்களில் செய்வதற்கு நிறைய காரியங்கள் இருக்கிறது. எனவே முன்னேற்றத்தின் விரோதிகளான காங்கிரஸ் அரசை மக்கள் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3dH2yRf
via
