விஜய்யின் வெற்றி, அடுத்த கட்ட சினிமா என எல்லாவற்றையும் நிர்வகித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் சற்றே ஒதுங்கியிருக்கிறார். விஜய்யின் மேலான அக்கறையில் எஸ்.ஏ.சி-யின் பங்கைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. அப்படியிருக்க, தகப்பன் - மகன் என்ற அற்புத உறவுக்கிடையில் இப்போழுது நடந்துகொண்டிருப்பது என்ன என அவரிடமே கேட்க புறப்பட்டோம்.
'நான் கடவுள் இல்லை' என்ற தன் புதிய படத்தில் பிஸியாக இருந்தவரை அணுகினோம். எல்லாவற்றையும் விகடனுக்காக பெர்சனலாக பேசக்காத்திருந்தார் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சி!
புதுப்படம், விஜய்யோடு என்னதான் பிரச்னை என ஆதி அந்தமாக அவரிடம் பேசினோம். மனம்விட்டு, தன் உள்ளத்தை உள்ளபடி திறந்து காட்டினார் எஸ்.ஏ.சி.
"உங்களுக்கே மகன்கிட்ட பேச முடியலையா... என்னங்க இது?’’
“உண்மை. கடைசியாப் பார்த்துப் பேசியது 2020 நவம்பர் 5. மூணு மாசமாச்சு. அவரை ரீச் பண்ண முடியலை. ‘துப்பாக்கி’ வரைக்கும் அவருக்கு மேனேஜர் மாதிரி இருந்திருக்கேன். மகனை நடிகனாக்க ஆசைப்பட்டு, மேக்கப் டெஸ்ட் எடுத்து, ஆல்பம் ரெடி பண்ணி பெரிய இயக்குநர்கிட்டயெல்லாம் கொடுத்தேன். ‘நானே தயாரிப்பாளராக இருக்கேன், படம் பண்ணுங்க’ன்னு சொன்னேன். யாரும் எடுத்துக் கொடுக்கலை. அவங்க மறுத்தப்ப நான்தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் ஆரம்பிச்சு வரிசையா எடுத்தேன். ‘பிள்ளையை வெச்சே ரொமான்டிக்கா படம் எடுக்கிறார்’னு என்னைத் திட்டினாங்க. அப்பறம்..."
இந்தக் கேள்விக்கான விடையுடன், இன்னும்... இன்னும் பல கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் மிகவும் வெளிப்படையாக பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி!
அவரின் முழுப் பேட்டியையும் நாளை வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் படிக்கலாம்.
from தமிழ் சினிமா https://ift.tt/37EwHwA
via
