"நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க!" லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா!

0

'சார்பேட்டா பரம்பரை'யில் ஆர்யா பரபரப்பாக, நாங்கள் அவரோடு சேர்ந்து சாயிஷாவையும் டூயட் பேட்டி ஒன்றுக்கு ஆயத்தமாக்கினோம். மும்பைக்கு போய் அம்மாவோடு செல்லம் கொஞ்சிவிட்டு வந்த சாயிஷாவை அண்ணா நகர் வீட்டில் ஆற அமர உட்கார வைத்து பேசினோம்.

தன் எதிர்கால சினிமா, சாயிஷாவோடு காதல், இல்லறம் இனிக்கிற விதத்தை எல்லாம் அருமை, பெருமையாக முதல் தடவையாக நம்மிடமே பேசினார்கள் இந்தத் தம்பதியினர்.

“உங்கள் காதல் கதையைச் சொல்லுங்களேன்...”

ஆர்யா, சாயிஷா

“நானும் இடையில் எவ்வளவோ லவ் பண்ணிப் பார்த்தேன். எதுவும் அமையலை. அப்புறம்தான் சாயிஷாவை ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பில் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சது. அவளைப் பார்த்துப் பழகியது, காதலானது, அன்பைப் பகிர்ந்துக்கிட்டதுன்னு இதெல்லாம் எந்தப் புள்ளியில் ஆரம்பிச்சதுன்னு சொல்ல முடியலை. அவள் இல்லாமல் நான் முழுமையா இல்லைன்னு புரிஞ்சது. நேரே அவங்க அம்மாகிட்டபோய் ‘எனக்கு சாயிஷாவைத் திருமணம் செய்து வையுங்கள்... நல்லா வச்சுப்பேன்’ என்றேன். ‘நான் இதில் எதுவும் முடிவு பண்ண முடியாது... சாயிஷாகிட்டே கேட்டுச் சொல்றேன். அவள் வாழ்க்கை பத்தி அவளேதான் முடிவு பண்ணணும்’னு சொன்னாங்க. நான் இதற்கு முன்னே எனது ஆட்டத்தைத் தொடங்கியிருந்தேன். அவகிட்டே போய் ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அவ நான் காமெடி பண்றேன்னு நினைச்சிருந்திருக்கா."

இந்தக் கேள்வியுடன் மேலும் பல பர்சனல் மற்றும் சினிமா சம்பந்தமான கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை ஆர்யாவும் சாயிஷாவும் அளித்திருக்கின்றனர்.

இந்த துறுதுறு, குறுகுறு காதல் பேட்டியை நாளை வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் படிக்கலாம்.



from தமிழ் சினிமா https://ift.tt/3uryz5w
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*