இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ், சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என எதிர்கட்சியினர் உட்பட அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கைகளைப் பிடித்து உயர்த்தினார். தேர்தல் முடியும் வரை ஓ.பி.எஸ் எந்த அரசியல் தந்திரங்களையும் கையாள மாட்டார் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டனர் கட்சி நிர்வாகிகள். இது ஒருபுறம் என்றால், ஓ.பி.எஸ் எப்போது பிரசாரத்தை துவங்குவார் என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்துவந்தது.
`நான் உரிய நேரத்தில், உரிய முறையில் பிரசாரத்தை தொடங்குவேன்’ என சமீபத்தில் தேனியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் ஓ.பி.எஸ்.
Also Read: சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! - ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?
இந்நிலையில், தமிழகம் முழுக்க பிரசாரம் செய்ய இருக்கும் வாகனத்தை தயார் செய்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன், அதனை எடுத்துச் சென்று, திருப்பதியில் சிறப்பு பூஜை செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
TN 60 AL 2345 என்ற பதிவு எண் கொண்ட ஓ.பி.எஸ் பிரசார வேனில், மஞ்சள் நிறத்தில் வேல் படம் வரையப்பட்டுள்ளது. அதனைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், எப்போதும் இடம் பெறாத வேல் படம், இப்போது ஏன் ஓ.பி.எஸ் பிரசார வாகனத்தில் இடம்பெற்றுள்ளது என ஓ.பி.எஸ் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``வேல் வரைவதில் என்ன தவறு இருக்கிறது? வெற்றி வேல் வீர வேல் என்பார்கள். எடுத்த காரியம் வெற்றியுடன் முடியவே, வேல் படம் வரையப்பட்டுள்ளது” என்றனர்.
தேர்தல் களத்தில் இறங்க, ஓ.பி.எஸ் மட்டுமல்ல, அவரது பிரசார வேனும் தயாராகிவிட்டது.
Also Read: `ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு வில்லன்’ - தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jUpg9m
via
