`மோடிஜி பாராட்டிச் சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது!’ - செல்லூர் ராஜூ

0

மதுரை வந்திருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ``தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் நட்பு ரீதியாக தமிழக பாஜக தலைவரை சந்தித்தேன்.

எல்.முருகன்

இச்சந்திப்பில் மோடிஜி தமிழகம் வந்து சென்றதைப் பற்றி பேசினோம். வரும் தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.க ஒருமுகமாக மக்களைச் சந்திக்கும்.

நாடு சுதந்திரத்துக்கு பிறகு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம்முடைய கலாசாரத்தை, பாரம்பரியத்தை, இலக்கியங்களை பாராட்டக் கூடிய பிரதமரை தற்போது தான் பார்க்கிறோம். வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளைப் பார்த்து, மக்கள் `கோ பேக்’ சொல்லப் போகிறார்கள்.

எல்.முருகனுடன் செல்லூர் ராஜூ

இந்திய அளவில் நல்லாட்சி கொடுக்கும் மோடிஜியும் தமிழகத்தில் சிறந்த ஆட்சி கொடுக்கும் எடப்பாடியும் ஒன்றாக இணைகிறார்கள்.

Also Read: `கட்சியைவிட்டு நீக்கியபோது எம்.ஜி.ஆர் பெரியப்பாவாகத் தெரியவில்லையோ?’- செல்லூர் ராஜூ கேள்வி

எடப்பாடியார் எளிமையான முதலமைச்சராக செயல்படுகிறார். அவர் கொடுத்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன

செல்லூர் ராஜூ

தே.மு.தி.க-வுடன் கூட்டணி தற்போதுவரை தொடர்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து உயர் மட்ட குழுவுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். மோடிஜி பாராட்டிச் சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது" என்றார். சசிகலா வருகை பற்ற கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமைச்சர் கிளம்பினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3u8xBuM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*