Exclusive: `வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரிலீஸ்... அஜித் ஓகே சொல்லிவிட்டாரா?! #Valimai

0
அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் படம் 'வலிமை'. 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு அடுத்து இருவரும் இணைந்திருக்கும் 'வலிமை' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சென்னை வந்த நரேந்திர மோடியிடமே 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்களை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார் அஜித்.

இதற்கிடையே 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்திருந்தன. சென்னை வரும் போனி கபூர் வலிமை அப்டேட்டை வெளியிடுவார் என்றார்கள். அதற்காக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரெடியாம். ஆனால், "இப்போது அப்டேட் வேண்டாம். படம் ஆகஸ்ட்டில்தான் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்போதே ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் அது படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் தூண்டிவிட்டுவிடும். அதனால் மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் ரிலீஸ் செய்யலாம்" என அஜித் சொன்னதாகத் தெரிகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள் மிகப்பிரமாதமாக வந்திருப்பதில் அஜித் செம ஹேப்பி என்கிறார்கள்.

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. மற்றொருபக்கம் தயாரிப்பாளர் போனி கபூர் தியேட்டர் விற்பனை தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்.

அஜித்

'வலிமை' படம் ஆகஸ்ட்டில் தியேட்டர்களில் மட்டுமே பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய்யின் 'மாஸ்டர்' படம்போல் இல்லாமல் தியேட்டரில் ரிலீஸாகி 35 நாட்களுக்குப்பிறகே 'வலிமை' ஓடிடி-க்கு வரும் என்று விநியோகஸ்தர்களிடம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் இறுதியில் ஒரு வியாழக்கிழமை நள்ளிரவில் வெளியாகும். அதனைத்தொடர்ந்து ட்ரெய்லர் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. ட்ரெய்லர் அநேகமாக அஜித்தின் பிறந்தநாளுக்கு முன்புவரும் வியாழக்கிழமை, அதாவது ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்!



from தமிழ் சினிமா https://ift.tt/37PfNLH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*