'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலி கான்

0

நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலி கான், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே, அங்கு அ.தி.மு.க தரப்பில் அமைச்சர் வேலுமணியும், தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம் காண்கின்றனர்.

மன்சூர் அலிகான்

தொகுதிக்குள் கணிசமாக உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக, வேலுமணி தரப்பில் மன்சூர் அலி கானை களமிறக்கியிருப்பதாக தி.மு.க-வினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், திடீரென்று மன்சூர் அலி கான் தேர்தலில் இருந்து விலகுவதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் நேற்று மாலை அறிவித்திருந்தார்.

Also Read: காலை பிரசாரம், மாலை தேர்தலிலிருந்து விலகல் - மன்சூர் அலிகான் முடிவுக்குக் காரணம் என்ன?

இதுகுறித்து மன்சூர் அலி கான் வெளியிட்டிருந்த ஆடியோவில், ``நான் இந்தத் தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். தொகுதியில எங்க போனாலும், ‘பாய் எவ்ளோ பணம் வாங்கினீங்க?’னு எல்லாருமே கேக்கிறாங்க. கமல் கட்சிலயும் பாய தான் நிறுத்திருக்காங்க. ‘பாய் ஓட்டை பிரிக்கத்தான நிக்கறீங்க?’னு கேக்கிறாங்க.

மன்சூர் அலி கான்

பத்துல 8 பேர் ஒருமாதிரி பாக்கறாங்க. எனக்கு சங்கடமா இருக்கு. அதனால, இந்தத் தேர்தல் வேணாம்னு முடிவு பண்ணி சென்னை கிளம்பிட்டேன். மக்கள் நல்லவங்களை தேர்ந்தெடுப்பாங்க. ஒரு சில இடங்கள்ல பிரசாரம் மட்டும் பண்ணுவேன். நான் தொண்டாமுத்தூர்ல போட்டியிடவில்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று தனது முடிவை மாற்றிக் கொண்டு மதியம் பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார் மன்சூர் அலி கான். சுயேச்சையாக போட்டியிடுவதால் சின்னம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு மன்சூர் அலி கான் செய்தியாளர்களை சந்தித்தார். ``திரும்பி வந்துட்டேனு சொல்லு. போற இடத்துல எல்லாம் பணம் வாங்கிட்டீயானு கேக்கறது, வாடகைக்கு வீடு கொடுக்காம பண்றதுனு என்னைய சோர்வடைய வைக்க நிறைய பண்ணாங்க.

மன்சூர் அலி கான்

என்னை அனுப்பறதுக்காக திட்டம் போட்டிருக்காங்க. அதனால யார் ஆதாயம் அடைய போறாங்கனு தெரிஞ்சு, அவங்களை ஒரு வழி பண்ணணும்னு கோதாவுல இறங்கிட்டேன். அப்படியெல்லாம் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

தென்னந்தோப்பு சின்னத்தை கேட்டு வாங்கிருக்கேன். தொண்டாமுத்தூர்ல தென்னை மரம்தான் நிறைய இருக்கு. அதுதான் அதிக வருவாய் தருது. அந்த வருவாயை பெருக்குவேன். பிரசாரத்துலயும் மரங்களை நடுவேன். வாளை உருவியாச்சு. இனி சில கிளைகளை வெட்டி சாய்ச்சுதான் வாளை உள்ள வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

மன்சூர் அலி கான்

இங்கதான் இருக்கேன். நான் எங்கயும் போகலை. கொங்கு மண்டலம் என் சொந்த ஊரு. நான் பிறந்த ஊரு ஜவ்வாதுபட்டி. என் சொந்த மண்ணுல நிக்காம நான் எங்க நிக்க முடியும்?” என்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rbdIR6
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*