விகடன் செய்தி எதிரொலி : ஓ.பி.எஸ் உடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு!

0

கடந்த 12ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம், போடி தாலுகா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்போது, அவரது மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் என சுமார் 20 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், தன்னுடன் 2 நபர்களை மட்டுமே அழைத்துவர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்டோரை, ஓ.பி.எஸ் அழைத்துவந்ததாக சர்ச்சை எழுந்தது.

ஓ.பி.எஸ்

இச்சம்பவம் தொடர்பாக, விகடன் இணையதளத்தில், ’1+20; தேர்தல் விதிகளை மீறிய ஓ.பி.எஸ்!’ - நடவடிக்கை பாயுமா? என்ற தலைப்பிட்ட செய்தி வெளியானது. இந்நிலையில், போடி நகர் காவல்நிலையத்தில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலச் சொக்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் புகார் கொடுக்க, அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது புகாரில், ’பெயர் விலாசம் தெரியாத, கண்டால் அடையாளம் காட்டக்கூடிய 8 பேர், அ.தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் நுழைந்து தேர்தல் விதி மீறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.!’ என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, IPC 143, 171(F) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: தேனி: காட்டுத்தீயில் கருகிய 26 உயிர்கள் - குரங்கணி தீவிபத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று!

”எந்தெந்த நபர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வந்தனர். அவர்கள் யார் யார் என அனைவருக்கும் தெரியும். அப்படியென்றால், அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர்கள் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, கண் துடைப்பு நாடகம் தான். ஊடகத்தினர் எடுத்துள்ள போட்டோக்கள், வீடியோக்களை ஆய்வு செய்தாலே போதும். காவல்துறை அதனை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bQzZ2p
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*